- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறப்பு காட்சிக்கு அனுமதி; நாளை விடுதலை 2 படம் ரிலீஸ்; கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்...

சிறப்பு காட்சிக்கு அனுமதி; நாளை விடுதலை 2 படம் ரிலீஸ்; கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் செய்த இயக்குனர் வெற்றிமாறன் – என்னாச்சு ப்ரோ?

- Advertisement -

கடந்த ஆண்டில் மார்ச் மாத இறுதியில் வெளியான படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகனாக சூரி நடித்திருந்தார். அதுவரை காமெடி நடிகராக இருந்த சூரியை விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் வெற்றிமாறன். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் சூரி வாழ்ந்திருந்தார்.

கடந்தாண்டில் செப்டம்பர் அல்லது அக்டோர் மாதம் விடுதலை 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 20 மாதங்களுக்கு பிறகு நாளை ( 20ம் தேதி) விடுதலை 2 படம் வெளியாகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியார், கென்னி, கிஷோர் உள்ளிட்டோர் புதிய கேரக்டர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

விடுதலை படம் முதல் பாகத்தை பொருத்த வரை சூரி, அவரது காதலி பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், சேத்தன் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் தந்து படத்தில் அவர்களுக்கான காட்சிகள் அதிகமாக இருந்தது. இதில் விஜய் சேதுபதி 5 க்கும் குறைவான சில நிமிட காட்சிகளில் மட்டுமே வந்து போனார். ஆனாலும் பெருமாள் வாத்தியார் என்ற அவரது கேரக்டர்தான் வலிமையானதாக இருந்தது.

இந்நிலையில் நாளை வெளியாகும் விடுதலை 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார், கென்னி, கிஷோர் உள்ளிட்டோருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுக்கான காட்சிகள் நிறைய உள்ளதாக தெரிய வந்துள்ளது. விடுதலை 2ம் பாகத்தை பொருத்த வரை படத்தின் நாயகன் விஜய் சேதுபதியாக தான் இருப்பார். சூரிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது என்ற பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே விடுதலை 2 படத்தின் நீளம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்று சொல்லப்பட்டது. இப்போது அதில் 8 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் புஷ்பா 2 படம், 3 மணி நேரம் 21 நிமிடங்கள் இருந்த நிலையில், விடுதலை 2 படம், 2 மணி நேரம் 53 நிமிடங்கள் இருந்திருக்கலாமே என்றுதான் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வீடியோ ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை 2 படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. படக்குழுவில் இருந்த எல்லாருக்குமே ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்திருக்கிறது. இது ஒரு நீண்ட பயணம் என்று கூறியிருக்கிறார். நாளை வெளியாகும் விடுதலை 2 படம் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்