- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர் சங்கத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் - இந்த முட்டுக்கட்டையை ஏற்க...

தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் – இந்த முட்டுக்கட்டையை ஏற்க முடியாது என்று திட்டவட்டம்!

- Advertisement -

கடந்த பல மாதங்களாகவே தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. இதனால் அடிக்கடி தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இருந்து வெளியிடப்படும் கருத்துக்களுக்கு நடிகர் சங்கம் தரப்படும் எதிர் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது இரு தரப்புக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு நடிகர்கள் தரப்பில் பல விதங்களில் நெருக்கடி ஏற்படுவதால், நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க தடை விதித்தது. அதிகரித்து வரும் படப்பிடிப்பு செலவுகள், தாறுமாறாக உயர்த்தப்படும் நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தயாரிப்பாளர் சங்கங்கள் சந்தித்து வருகிறது.

- Advertisement -

அதனால் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து, பேச்சு வார்த்தையை நடத்தி மறு சேவை சீரமைப்பு செய்வதற்காக இந்த தடை அறிவிப்பை வெளியிடுவதாக ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தயாரிப்பாளர் சங்கம் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை பாரம்பரியமான தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது. இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது தமிழ்த்திரை துறை சார்ந்த தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும்தான் இது பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், வேலை நிறுத்தம் முட்டுக்கட்டையாகவே கருதப்படும். அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது. அதே சமயம் தமிழ் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும் என்று அந்த அறிக்கையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்