- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசன் நடித்த குணா படம் 2ம் பாகமாக வெளிவருமா? படத்தின் டைரக்டர் சந்தான பாரதி ஓபன்...

கமல்ஹாசன் நடித்த குணா படம் 2ம் பாகமாக வெளிவருமா? படத்தின் டைரக்டர் சந்தான பாரதி ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தனித்துவமான ஒரு கலைஞன் என்றால் அது மிகையல்ல. உண்மையில் அவரை போன்ற உன்னத கலைஞன், இந்திய சினிமாவிலேயே யாரும் கிடையாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர் தொட்ட உச்சங்களின் நிழலை கூட யாரும் நெருங்க வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.

அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, திரைக்கலைஞனாக அவர் செய்த சாதனைகள் ஏராளம். சினிமாவில் தொழில்நுட்பங்கள் அதிகமாக வளராத காலகட்டத்திலேயே குள்ளமான உருவத்தில் அப்புவாக அபூர்வ சகோதர்கள் படத்தில் நடித்தார். இந்தியன் தாத்தாவாக, அவ்வை சண்முகி மாமியாக அவரது நடிப்பை கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது.

- Advertisement -

அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவரது செயல்பாடுகள், முடிவுகள், கொள்கைகள் குறித்த பலவிதமான மாற்று கருத்துகளும், சர்ச்சைகளும் இருந்தாலும் கமல்ஹாசன் ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு செய்த பணிகளும், சேவைகளும், பெருமைகளும் ஏராளம் என்பதை தமிழ் திரைத்துறை சார்ந்தவர்களும், பொதுவான ரசிகர்களும் அறிந்துள்ளனர்.

கமல் நடிப்பில் கடந்த 1990களில் வெளியான படம் குணா. இந்த படத்தை கமலின் நெருங்கிய நண்பர் இயக்குனர் சந்தானபாரதி டைரக்ட் செய்திருந்தார். ஆனால் படத்தின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானித்தவர் நடிகர் கமல்தான். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போதும் குணா படத்தை ரசிகர்களை கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற மலையாள படத்தில் குணா படத்தில் வந்த கண்மணி அன்போடு பாடல், எந்தளவுக்கு வைப் ஆகி படத்தை தூக்கி நிறுத்தியது என்பதை படம் பார்த்த ரசிகர்களே உணர்ந்திருப்பார்கள். அந்தளவுக்கு சிறப்பு மிக்க குணா படத்தின் 2ம் பாகம் வெளிவருமா என்பது பலரது கேள்வியாக, விருப்பமாக உள்ளது.

இதுகுறித்து நடிகர் மற்றும் இயக்குனர் சந்தானபாரதி கூறியதாவது, குணா படத்தின் 2ம் பாகத்தை எடுத்து அதை கெடுக்க விரும்பவில்லை. ஒரு படத்தை 2ம் பாகம் எடுத்தால் அதற்கேற்ப கதை, நடிகர்கள் இருக்க வேண்டும். என்னுடைய கருத்துப்படி எந்த ஒரு கிளாசிக் படத்தையும் 2ம் பாகமாக எடுக்க கூடாது. கிளாசிக் படங்கள் அந்த மாதிரி பார்ட் 2 ஆக வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஒரு கிளாசிக் படம் என்றால் அந்த மரியாதையை அப்படியே விட்டுவிட வேண்டும், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்