தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகராக இப்போது இருப்பது நடிகர் விஜய் தான். தி கோட் படம் இதுவரை 450 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது கடைசி படம் என்று அவரை ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
சினிமா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியை வலுப்படுத்தி வரும் நடிகர் விஜய், 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நான்தான் முதல்வராக போகிறேன் என்ற ரீதியில் இருந்து வருகிறார். இதற்காக வருகிற அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விசாலை என்னும் கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாடு நடத்த நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநில நிர்வாகிகள் வேகமாக செய்து வருகின்றனர். இந்த மாநாட்டில்தான் தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதால், இந்த மாநாடு பலத்த கவனம் பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவது பலத்த பாதிப்பை தயாரிப்பாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் விஜய் நடித்தால் கூட ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சினிமா வர்த்தகம் நடக்கும். பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல இயக்குனர்களுக்கு வெற்றி படம் தந்த வாய்ப்பு கிடைக்கும்.
அதனால் நடிகர் விஜய் சினிமாவில் விட்டு விலகிச் செல்வது சினிமாத்துறைக்கும், ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக உள்ளது. ஏனெனில் விஜய் நடிப்பை ரசிக்க தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அரசியலுக்கு அவர் சென்றாலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விஜய்க்கு அடுத்தபடியாக இருக்கும் நடிகர் அஜித்குமார், விஜய் இடத்துக்கு வர முயற்சிப்பார். விஜய் போலவே ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடித்து அவர் இல்லாத குறையை தீர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராக வருகிறார். அவர் பெரும்பாலும் மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், வெளிநாடுகளில் சுற்றுலா போன்றவற்றில் ஆர்வமாக இருப்பதால் விஜய் இடத்துக்கு அவர் நிச்சயமாக வரப்போவதில்லை என்பது தெளிவாகிறது. அதனால் விஜய், அஜித்குமாருக்கு அடுத்த நிலையில் இருக்கும் விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிலம்பரசன் போன்றவர்கள் விஜய் இடத்துக்கு நாம் வந்துவிடலாம் என்று சந்தோஷத்தில் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.





