சென்னையில் கடந்த 18ம் தேதி வணங்கான் படம் இசை வெளியீட்டு விழா மற்றும் சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, பாலா, அருண்விஜய், சிவக்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலர் பங்கேற்று தங்களது வாழ்த்துகளை, பாராட்டுகளை மேடையில் தெரிவித்தனர்.
இதுகுறித்து இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 18ம் தேதி நடந்த விழாவில் நானே எதிர்பாராத அளவுக்கு என்னை இன்பக் கடலின் மூழ்கடித்து விட்டது, எத்தனை எத்தனை அன்பு உள்ளங்கள் அத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்துச் சென்றதில் என் உள்ளம் மகிழ்ந்து நிறைந்தேன்.
நேரில் வர இயலாத சூழலில் பலரும் தொலைபேசி வாயிலாக அழைத்தும் வாழ்த்து தெரிவித்தனர். நான் எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை. ஆனால் அத்தனை பேரும் என் மீதான அன்பின் மிகுதியால் வாழ்த்து கூறின.ர் இடைவிடாத மக்கள் பணிகளிலும் எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்து செய்தி அனுப்பிய ஒவ்வொரு தலைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொலைபேசி மூலம் அன்பு பாராட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்கு நேரில் வந்து வாழ்த்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்.
தொலைபேசி வழியாக வாழ்த்திய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம் எல் ஏ வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ தமிமும் அன்சாரி தனியரசு முதலியோருக்கு என் அன்பான பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வர இயலாத சூழலை சொல்லி வருந்தி என்னைப் பற்றியே எண்ணி என் மீது அக்கறை கொண்டு கடிதம் எழுதிய இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களுக்கும் என் நெகிழ்வான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சிக்காக உழைத்த கலைஞர்கள் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு நன்றி சொன்னால் அது மிக மிக நீண்ட கடிதம் ஆகிவிடும் என்பதால், அனைவருக்கும் என்றென்றும் நன்றி அன்புடன் பாலா என்று அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.





