- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமான பயணத்தில் அந்த நடிகர் கற்றுக்கொடுத்த பாடம் - நெகிழ்ச்சியாக தெரிவித்த நடிகை பாத்திமா பாபு!

விமான பயணத்தில் அந்த நடிகர் கற்றுக்கொடுத்த பாடம் – நெகிழ்ச்சியாக தெரிவித்த நடிகை பாத்திமா பாபு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் பாத்திமா பாபு. ஆரம்பத்தில் தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அம்மா அக்கா சித்தி அண்ணி என பல கேரக்டர்களில் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை பாத்திமா பாபு கூறியததாவது, என்னுடைய டீன் ஏஜ் வயதில் நான் நடிகர் சரத்பாபுவை விரும்பினேன். அவர் மீது எனக்கு ஒரு கிரஷ் இருந்தது. ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம்.

- Advertisement -

அப்போது டெல்லியில் ஆளவந்தான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணித்தோம். அப்போது சரத்பாபு என்றும் மறக்கமுடியாத ஒரு பாடம் சொல்லித் தந்தார். அந்த காலட்டத்தில் எல்லா விமானப் பயணங்களிலும் உணவு பரிமாறப்படும்.

இப்பொழுது போல பணம் வாங்கிக்கொண்டு அல்ல. ஏராளமானச் சின்னக் கிண்ணங்கள் பேப்பரால் பொதிக்கப்பட்டு பலவிதமான உணவு வகைகள் ஒரு பெரிய காகிதப் பெட்டியில் ஜரிகைத் தாள் பொதித்துப் பரிமாறப்படும். நானும் சரத்பாபுவும் பயணித்த போது அப்படி எங்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

- Advertisement -

உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு காலி கிண்ணங்களையும் அவற்றில் இருந்து பிரித்த ஏராளமான நெகிழித் தாள்களையும் மிக நேர்த்தியாக ஒன்றின் உள் இன்னொன்று வைத்து பெரிய பேப்பர் சதுரக் கிண்ணம் மூடி வந்த சில்வர் பேப்பரை ஜாக்கிரதையாக மீண்டும் பொதித்து அழகாகத் திருப்பிக் கொடுத்தார் சர்பாபு. அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வந்த விமானப் பணிப்பெண்ணிடம் அதை திரும்ப ஒப்படைத்தார்.

அப்போது என்னிடம், அவர்களும் நம்மைப் போன்றவர்களே. நம் எச்சில் பட்ட காகிதங்களை அப்படியே அவர்களிடம் தரக் கூடாது என்றார். அதன்பின்பு நான் எந்த பயணத்தின் போதும் தூக்கிபோடும் குப்பைகளை மிக நேர்த்தியாக பொதித்து வந்தது போலவே திரும்பத் தருகிறேன். நான் அப்படித் தரும் ஒவ்வொரு முறையும் நண்பர் சரத்பாபு நினைவில் வருவார் என்று நடிகை பாத்திமா பாபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்