தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படத்தில் திரில்லர் கலந்த காட்சிகளை வைத்து கொடுப்பவர் தான் இயக்குனர் மகிழ்திருமேனி. அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களுமே வசூல் ரீதியாக கவனம் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு தடையற தாக்க திரைப்படத்தை நாம் கூறலாம்.
என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் கம்பேக் அருண் விஜய்க்கு ஆக்சன் ஹீரோ மெட்டீரியலாக மாறுவதற்கு உதவிய திரைப்படம் தான் தடையற தாக்க. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் வரவேற்பு பெற்றது. இதன்பிறகு இதே கூட்டணி இணைந்து தடம் திரைப்படத்தை கொடுத்தது. அதில் அருண் விஜய்க்கு ரெட்டை கதாபாத்திரம்.
அதில் மிக அற்புதமாக கதை எழுதி பாராட்டைப் பற்றி இருந்தார் மகிழ்திருமேனி. இதேபோல், ஆர்யாவை வைத்து மீகாமன் என்னும் திரைப்படத்தையும் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இதுவும் விமர்சன ரீதியாக ரசிகர்களின் பாராட்டை பெற்றது. உதயநிதியை வைத்து அவர் எடுத்த கலகத் தலைவனும் ஆக்சன் கலந்த திரில்லர் திரைப்படம் தான்.
இப்படியான சூழலில் தான் தற்போது, அஜித் குமாரை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மகிழ் திருமேனி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமான இதன் படபிடிப்பு, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடந்து முடிந்துள்ளது. இதில் அஜித் குமாருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் திரிஷா.
அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் இதன் படப்பிடிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்னும் திரைப்படத்தின், தழுவல் தான் இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு நடைபெற்று இருந்த வேளையில், இயக்குனர் மகிழ்திருமேனிக்கும் அஜித் குமாருக்கும் இடையே சின்ன மனஸ்தாபம் இருந்ததாக கூறப்பட்டது.
இப்படியான சூழலில் தான் படம் குறித்து ஒரு சிறிய லெட்டரை எழுதி இருக்கிறார் மகிழ் திருமேனி. அதில், அஜித் சார் அளவற்ற காதலால் உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன். எங்களை வழிநடத்தி ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி சார். விடாமுயற்சியின் வெற்றி பயணத்தில் ஒட்டுமொத்த குழுவும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சார் என்று தெரிவித்துள்ளார். மிக முக்கியமாக அந்த லெட்டரில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.





