- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பொண்ணு துபாய்க்கு போகலே, இப்பவும் அதே வீட்டுல தான் 2 பேரும் இருக்காங்க என்...

அந்த பொண்ணு துபாய்க்கு போகலே, இப்பவும் அதே வீட்டுல தான் 2 பேரும் இருக்காங்க என் மகளோட வாழ்க்கை தலைகீழாக மாறிடுச்சு – நடிகர் ரவிமோகனின் மாமியார் கண்ணீர்!

- Advertisement -

நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் தனது 2 பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ரவிமோகனின் நெருக்கமான தோழி பாடகி கெனிஷா ரவிமோகனை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை ரவிமோகனின் மாமியார் சுஜாதா மறுத்திருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரவிமோகனின் மாமியார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியதாவது, எந்த ஒரு தாயும் தன் மகளோட வாழ்க்கை கெட்டுப் போகணும்ன்னு நினைக்க மாட்டார். பத்து விதமான சடங்குகள் செஞ்சு பிரம்மாண்டமாக கல்யாணம் பண்ணி வச்சது பிரிப்பதற்காகவா?

- Advertisement -

என் மகள் ஆர்த்தி என்ன சம்பாதிக்கிறாளா? என் பேரனுக்கு 17 வயசு ஆகுது. இதுக்கு மேல அவருக்குன்னு என்ன வாழ்க்கை இருக்கு? நான் அவருக்காக 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து இருக்கேன். யாருடைய சொத்தையும் நாங்கள் எடுக்கலே. அப்படி எடுக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.

என் பேரன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்ததில் இருந்தே ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்போது அவருக்கு 17 வயதாகிறது. அவர் லண்டனுக்கு படிக்கப் போகிறார். அப்போதுதான் பாஸ்போர்ட் எக்ஸ்பைரி ஆகப்போகுதுன்னு தெரிய வந்தது. அப்பா கையெழுத்துக்காக ஜெயம் ரவிக்கு போன் செஞ்சாங்க. அவரும் கையெழுத்து போட்டு தரேன்னு சொன்னார்.

- Advertisement -

ஆனால் போன வாரம் பாஸ்போர்ட் ஆபீஸ்க்கு அவர் வரவே இல்லை. என் பேரன் சாப்பிடாம 6 மணி நேரமா அங்கே காத்துக் கிடந்தான். ஆனால் என்னை ஏடிஎம் மிஷின்னு என்று நினைத்தீர்களா? என்னை வைத்து சம்பாதித்தது போதாதா? கையெழுத்து போட முடியாதுன்னு பக்கம் பக்கமா செல்லுல எங்களுக்கு மெசேஜ் வருது.

ஜெயம் ரவி அப்படிப்பட்ட ஆளே கிடையாது. அவருடைய போன் இருந்து வேற யாரோ தான் பக்கம் பக்கமா மெசேஜ் அனுப்புறாங்க. ரவியும் அந்த பொண்ணும் பிரிஞ்சுட்டாங்க. அந்த பொண்ணு துபாய் போயிட்டதாக சொல்றது எல்லாமே பொய். ரெண்டு பேரும் இன்னமும் ஒரே வீட்டில் தான் இருக்காங்க. என் மகளின் வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறிவிட்டது என்று சுஜாதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

- Advertisement -

சற்று முன்