- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களிடம் அப்படி யாராவது சொன்னால் அவர்களை உடனே விரட்டியடிங்க - நடிகர் ரவி மோகனனின் மனைவி...

உங்களிடம் அப்படி யாராவது சொன்னால் அவர்களை உடனே விரட்டியடிங்க – நடிகர் ரவி மோகனனின் மனைவி ஆர்த்தி கோபம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி. கடந்தாண்டில் தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். இப்போது ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் துவங்கியிருக்கிறார்.

மேலும் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மனைவி ஆர்த்தி மற்றும் தனது 2 பிள்ளைகளை நடிகர் ரவி மோகன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நடிகர் ரவிமோகன் கெனிஷா என்ற பாடகியுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். அவர் ஹீலர் என்பதால் மனரீதியாக பாதிக்கப்பட்ட நடிகர் ரவிமோகனுக்கு அவர் தந்த மனம் சார்ந்த சிகிச்சைகள் தான் அவரை கடுமையான மன உளைச்சலில் இருந்து மீட்டு வந்ததாக நடிகர் ரவிமோகன் ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும் என்னுடைய வாழ்க்கையில் ஒளியாக வந்தவர் கெனிஷா என்றும் அப்போது நடிகர் ரவிமோகன் பேசியிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவிமோகனை விட்டு பாடகி கெனிஷா பிரிந்து சென்றுவிட்டார். அதனால் ரவிமோகன் தனது படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ரவிமோகன் தனது பிள்ளைகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பார்த்து பேசவும், மாதந்தோறும் மனைவி ஆர்த்தி மற்றும் பிள்ளைகளுக்காக ரூ. 3 லட்சம் குடும்ப செலவுக்காக வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ரவிமோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, உங்களை குணப்படுத்துகிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களை விரட்டியடியுங்கள் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். நடிகர் ரவிமோகனுக்கு ஹீலர் சிகிச்சை மூலம் குணப்படுத்த வந்தவர்தான் பாடகி கெனிஷா. அதை தான் ஆர்த்தி ரவி இப்படி காட்டமாக கூறியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்