- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் தில்ராஜூ போட்ட திடீர் கண்டிஷன் - அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா?...

இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் தில்ராஜூ போட்ட திடீர் கண்டிஷன் – அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா? – யோசிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2 கமல்ஹாசன் ஷங்கர் அனிருத் கூட்டணியில் வெளியான இந்த படம், இந்த ஆண்டின் மிக மோசமான தோல்விப் படம் என்று கூறப்பட்டது. ஆனால் சூர்யா நடித்த கங்குவா படம், இந்த படத்தை 2ம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை அடைந்ததாக ரசிகர்கள் கலாய்த்தனர்.

ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை இயக்கியதால் ஏற்பட்ட குழப்பம்தான், இந்தியன் 2 படத்தின் மிக மோசமான தோல்விக்கு காரணம். அத்துடன் இயக்குனர் ஷங்கருக்கு திரைக்கதையில் மிகவும் பக்கபலமாக இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. அவரது மறைவும் இந்த படத்தில் அவர் பணியாற்றாமல் போனதும் ஷங்கருக்கு குழப்பம் தந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

எனினும் இப்போது இந்தியன் 3 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பலமடங்கு வெற்றிப் படமாக தருவதில் இயக்குனர் ஷங்கர் முழு உறுதியுடன் இருக்கிறார். அதன்பிறகு மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை திரைப்படமாக உருவாக்கும் பெரிய திட்டத்தையும் கையில் வைத்திருக்கிறார்.

இதற்கிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் உருவான கேம் சேஞ்சர் படம், வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்துடன் தமிழில் விடாமுயற்சி, வணங்கான் படங்களும் ரிலீஸாகின்றன.

- Advertisement -

கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று கேம் சேஞ்சர் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசி வருகின்றனர். பான் இந்தியா படமாக இந்த படம் பல மொழிகளில் வெளியாகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஷங்கரை அழைத்துப் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, நீங்கள் எல்லா சேனல்களிலும் கேம் சேஞ்சர் படம் குறித்த பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளுங்கள். கேம் சேஞ்சர் படம் குறித்து நேர்காணல்களில் நிறைய பேசுங்கள் என்று கண்டிஷனாகவே கூறியிருக்கிறார். ஆனால் இதுபோன்ற நேர்காணல்களை அதிகம் விரும்பாத ஷங்கர், வேறு வழியின்றி தயாரிப்பாளரிடம் ஓகே சொல்லியதுடன் அதற்காக நிறைய நாட்களையும் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்