சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கே கவனம் செலுத்தி வந்த அவர், இசையின் மீதும் தனி ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கு ஏற்றார் போல், 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படமாக அமைந்த சுப்பிரமணியபுரத்தில், பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

கண்கள் இரண்டால் பாடலை தந்த ஜேம்ஸ் வசந்தனை பலரும் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து, பசங்க, நாணயம், யாதுமாகி, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார் ஜேம்ஸ் வசந்தன். சுப்பிரமணியபுரம் திரைப்படத்திற்காக அவர் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இசையமைப்பாளர் என பெயர் பெற்றிருக்கும் ஜேம்ஸ் வசந்தன், சமீப காலமாக இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இளையராஜாவிடமே இசையை கற்று விட்டு அவரைப் பற்றி தரக்குறைவாக ஜேம்ஸ் வசந்தன் பேசுவதாக, பதிலுக்கு இளையராஜா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதையெல்லாம் பொருட்படுத்தாத ஜேம்ஸ் வசந்தன், அவரைப் பற்றி தொடர்ந்து குறை கூறிக் கொண்டே வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவைப் போல் ஒரு மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது என்று கூறி பரபரப்பை உண்டு பண்ணினார். அவர் இசையை நான் என்றுமே விமர்சித்ததில்லை என்றும், அப்படி கூறினால் அது என் குருவை விமர்சித்ததாக அர்த்தம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேசமயம், இளையராஜா ஒரு முதிர்ச்சியும், பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் இல்லாத மனிதர் என்று பேசியிருந்தார். இதனால் ஜேம்ஸ் வசந்தனை பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், இளையராஜாவை மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெங்காலி பாடகி ஸ்ரேயா கோஷல், ஜானி படத்திலிருந்து காற்றில் எந்தன் கீதம் பாடலை பாடினார். அப்போது “காணாத ஒன்றைத் தேடுதே” என்னும் வரிகளுக்கு பதிலாக அவர், தோடுதே என்று படித்தார். அந்த பாடலில் மீண்டும் அந்த வரி வரும்போதும், தோடுதே என்றே குறிப்பிட்டார்.
இதை எல்லாம் மேடையிலே அமைதியாக சிரித்துக் கொண்டே பார்த்திருந்த இளையராஜா, “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று பேசினார். இது எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை. மொழி தெரியாத பாடகர்களுக்கு, சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டியது இசையமைப்பாளரின் கடமை. அவரிடம் தமிழில் நகைச்சுவை கூறி கிண்டல் செய்யலாமா? மொழி தெரியாதவரிடம் அநாகரிகமாக பேசி கிண்டல் செய்தவர் இளையராஜா. அன்று அவர் தரம் தாழ்ந்தே போனார் என்று பேசி உள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த கூற்று, இளையராஜா ரசிகர்களை ஆத்திரமூட்டியுள்ளது.





