நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். அவர் இதுவரை 230 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் 70 வயதுகளை நெருங்கும் கமல், பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் தக்லைப் படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கிறார்.
தக்லைப் படத்தை தொடர்ந்து கல்கி 2898 ஏடி மற்றும் அன்பரிவ் இயக்கும் கமல் 233 ஆகிய படங்களில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்காவில் 45 நாட்களுக்கு நடக்கும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்கவும் கமல் அமெரிக்கா விரைவில் சொல்ல இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மகள்கள் அக்சரா ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரை கடத்த முயற்சி நடந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கடந்த 1990களில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் வேலை பார்த்த சில நபர்கள், ஸ்ருதிஹாசன் அக்சராஹாசன் இருவரையும் கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது தடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து கடும் கோபமடைந்த நடிகர் கமல்ஹாசன், தன் மகள்களை கடத்த முயன்றவர்களை கொலை செய்யவும் தயாராக இருந்திருக்கிறார். ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை வைத்து மையமாக வைத்து தான், நான் மகாநதி படத்தை எடுத்தேன் என்று ஒரு நேர்காணலில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
மகாநதி படம் கடந்த 1994 ஆம் ஆண்டில் வெளிவந்தது. படத்தின் கதை திரைக்கதை எழுதி அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு தேசிய விருதுகளும் மகாநதி படத்துக்கு கிடைத்தது. கடத்தப்பட்ட தனது மகளை, சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து கமல் மீட்டு வருவது, தன் மகளை கற்பழித்த தொழிலதிபரை கொல்ல, தன் கையை வெட்டிக்கொள்வது என கமல் சிறப்பான நடிப்பை தந்திருந்தார்.
இந்த படத்தில் நடிகை சுகன்யா, நடிகர்கள் பிஎஸ் ஹனிபா, ராஜேஷ், பூர்ணம் விஸ்வநாதன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களை நடித்திருந்தனர்.தனது மகள்களை கடத்த முயற்சி செய்யப்பட்ட அந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் மகாநதி படத்தை இயக்கியதாக நடிகர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் பகிரங்கமாக கூறியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





