- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென ஹீரோவாக மாறிய காமெடி நடிகர் ரவி மரியா… ஊர் உலகமெல்லாம் அவருக்கு கதாநாயகி தேடறாங்களாம்…...

திடீரென ஹீரோவாக மாறிய காமெடி நடிகர் ரவி மரியா… ஊர் உலகமெல்லாம் அவருக்கு கதாநாயகி தேடறாங்களாம்… போடு வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் மிளகா போன்ற படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் வில்லன் நடிகராக மாறினார். வெயில் மாயாண்டி குடும்பத்தார் மனம் கொத்திப் பறவை தேசிங்கு ராஜா உள்ளிட்ட பலல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

அதன்பிறகு காமெடி நடிகராக மாறிய ரவி மரியா பல படங்களில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். இப்போது நடிகர் ரவி மரியா கதாநாயகனாக உருவாகி இருக்கிறார். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 3வது படத்தில் ராதாரவி, ரவி மரியா இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிற நிலையில் 2026ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பழகிய நாட்கள், மூன்றாம் மனிதன் ஆகிய திரைப்படங்களை தயாரித்த இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

படத்தில் ராதாரவி ரவி மரியா இருவரும் இரட்டை நாயகர்களாகவும் கஞ்சா கருப்பு இயக்குனர் பேரரசு நிழல்கள் ரவி பழ கருப்பையா நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக கார்த்திக் நாயர் பணி செய்கிறார். அரசியலும் காமெடியில் கலந்த கதையில் தயாராகும் இந்த படத்தில் ரவி மரியாவும் இணைந்து அரசியல் செய்வது போல கதைக்களம் உருவாகியுள்ளது.

- Advertisement -

சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தி இந்த படத்தை திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடும் படலம் இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இயக்குனர் ராம்தேவ் கூறியிருக்கிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் வாரத்தில் தேனியில் தொடங்க இருக்கிறது. இயக்குனராக சினிமாவுக்குள் வந்து வில்லனாக நடித்து பிறகு காமெடி நடிகராக மாறியவர் ரவி மரியா. இப்போது கதாநாயகனாக நடிக்க உள்ள நிலையில் அவருக்கு உலக அளவில் கதாநாயகி தேடுவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்