- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட கால காத்திருப்புக்கு பின் விடாமுயற்சி பாடல் வெளியானது; வயசான மாதிரியே தெரியலையே… ஸ்மார்க் லுக்கில்...

நீண்ட கால காத்திருப்புக்கு பின் விடாமுயற்சி பாடல் வெளியானது; வயசான மாதிரியே தெரியலையே… ஸ்மார்க் லுக்கில் ஏகேவை பார்த்து துள்ளிக்குதித்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். நடிகர் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படும் நிலையில், விஜய் அரசியலை விட்டு விலக உள்ள நிலையில், அஜீத்குமாரும் ஸ்போர்ட்ஸில் ஆர்வமாக இருக்கிறார். அதனால் விஜயை போலவே, அவரும் எதிர்காலத்தில் சினிமாவை விட்டு விலக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றாலும் திரும்ப சினிமாவில் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கூறுவது போல், அஜீத்குமார் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாலும் சினிமாவிலும் அவர் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று ஏகே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களுக்கு நடக்கும் கார் ரேஸ் போட்டியில் அஜீத்குமார் தனது அணி வீரர்களுடன் பங்கேற்கிறார். துபாயில் துவங்கும் இந்த கார் ரேஸ் போட்டி தொடர்ந்த 10 மாதங்களுக்கு 10 நாடுகளில் நடக்க உள்ளது. அதனால் 2026ம் ஆண்டில் அஜீத்குமார் படப்பிடிப்பு எதுவும் நடக்கப் போவது இல்லை.

அதே நேரத்தில் அஜீத்குமார் தன் ரசிகர்களை ஏமாற்றாமல் இந்த முறை தனது 2 படங்களை அடுத்தடுத்து தர இருக்கிறார். அந்த வகையில் விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்ற 2 படங்கள் 2025ம் ஆண்டில் வெளியாக உள்ளது. விடாமுயற்சி வருகிற ஜனவரி 10 அல்லது 14ம் தேதி, குட்பேட் அக்லி மே 1ம் தேதி, அஜீத்குமார் பிறந்த நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகளாக அஜீத் படமே வராத நிலையில், நீண்டகால காத்திருப்புக்கு பின் அஜீத்குமார் திரிஷா நடித்த விடாமுயற்சி படப்பாடல் இப்போது வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் சவடீகா என்ற இந்த பாடல் நேற்று வெளியாகி, ஏகே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த பாடலை அறிவு எழுதியிருக்கிறார். ஆண்டனிதாசன் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் அஜீத்குமாரின் ஸ்மார்ட் லுக், திரிஷாவின் பியூட்டி லுக் பார்த்து ஏகே ரசிகர்கள், ஏகப்பட்ட உற்சாகத்தில் உள்ளனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்த படம் திரைக்கு வரும் நாளை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்