- Advertisement -
Homeபொழுதுபோக்குகேன்சர் நோய்க்காக அமெரிக்காவில் 6 மாதங்கள் சிகிச்சை பெறும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் - இப்படி...

கேன்சர் நோய்க்காக அமெரிக்காவில் 6 மாதங்கள் சிகிச்சை பெறும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் – இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறாரா? அசந்து போன சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

கன்னடத்தில் மிக பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவராஜ்குமார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதே போல் தனுஷ் நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்திருந்தார். அதே போல் ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் 2 படத்தில் அவருக்கு அதிக காட்சிகள் உள்ளதுபோல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அவரது 230வது படத்தில் கமிட் ஆகி இருந்தார். சில ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு துவங்காமல் தாமதமாகி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த படம் டிராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக நடிகர் விஷால் அந்த படத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளீயானது.

- Advertisement -

தற்போது வெளியான தகவலின்படி நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவில்லை என்ற முடிவை செய்திருக்கிறார். இப்போது அமெரிக்கா சென்றுள்ள அவர் 6 மாதங்கள் அங்கேயே தங்கி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமான பிறகுதான் கர்நாடகா மாநிலத்துக்கு திரும்ப உள்ளார்.

வருகிற மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்கும் பட்சத்தில் கடைசி ஷெட்யூலில்தான் சிவராஜ்குமார் நடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு திரும்பி போதிய ஓய்வு எடுத்த பிறகுதான், ஜெயிலர் 2 ஷூட்டிங்கில்தான் கலந்துக்கொள்ள இருக்கிறார். அதனால் ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் நடிப்பது உறுதி என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் எப்படியோ அதே போல், சிவராஜ்குமாரும் மிகுந்த உயர்ந்த குணம் கொண்டவர். மக்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் மிக்கவர். அவரது பரம்பரை சொத்துகளை பாகம் பிரித்து அவருக்கு தந்த போது அப்படி வந்த பல கோடி ரூபாய் சொத்துகளை எல்லாம் எனக்கு வேண்டாம் என்று அவர் மறுத்திருக்கிறார்.

அவருக்கு குடும்ப சொத்துகளாக கிடைத்த பல கோடி ரூபாய் மதிப்பலான அனைத்தையும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசிரமங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் விடுதிகள், அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்துவிட்டார். என்னுடைய நடிப்பில் வரும் கோடிக்கணக்கான வருமானமே எனக்கு போதும், பரம்பரை சொத்துகளே எனக்கு வேண்டாம் என அதை மொத்தமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய பெரிய பண்பாளர் சிவராஜ்குமார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்