- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கி இருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் கதை இதுதான்... போடு, கேட்கும்போதே புல்லரிக்குதே... அப்புறம்...

ஷங்கர் இயக்கி இருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் கதை இதுதான்… போடு, கேட்கும்போதே புல்லரிக்குதே… அப்புறம் கார்த்திக் சுப்பராஜ் எழுத்துன்னா சும்மாவா…

- Advertisement -

விக்ரமை வைத்து ஐ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எந்திரன் 2.0 படங்களை இயக்கியிருந்தார் சங்கர். அடுத்ததாக தனது இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளை 2019 ஆம் ஆண்டு தொடங்கினார். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்க முன் வந்தது. அந்த அறிவிப்பே ரசிகர்களின் புருவத்தை உயர்த்த செய்தது.

 

- Advertisement -

ஆனால் படப்பிடிப்பின் போது கமல்ஹாசனுக்கும் சங்கருக்கும் இடையேயான முரண்பாடு, தயாரிப்பு நிறுவனத்திற்கும் சங்கருக்கும் இடையேயான பிரச்சனை, கொரோனா கட்டுப்பாடுகள், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் என அடுத்தடுத்த விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்தன. இதனால் இந்தியன் 2 திரைப்படம் தள்ளிக்கொண்டே போனது.

 

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தின் போது அதன் மூன்றாம் பாகத்தையும் சங்கர் எடுத்து முடித்தார். இந்தத் தகவல் ரசிகர்களை ஆச்சரியமூட்ட, கடந்த ஜூலை மாதம் இந்தியன் 2 திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்த திரைப்படம் ரசிகர்களின் மனதை கவரவில்லை. ஏற்கனவே ஐ மற்றும் எந்திரன் 2.0 திரைப்படங்களின் மூலம் சங்கர் பெரியளவு ரசிகர்களை ஈர்க்காத சூழலில், இந்தியன் 2 அவருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தது.

 

படத்தின் திரைக்கதை சுத்தமாக எடுபடவில்லை என்றும், முதல் பாகத்தில் இருந்த அந்த உயிரோட்டம் இதில் டோட்டலாக மிஸ் ஆகி இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். சிலர் ஒரு படி மேலே போய் இந்தியன் 2 திரைப்படத்தை கலாய்க்க ஆரம்பித்தனர். இணையத்தின் எந்த பக்கம் திரும்பினாலும் அந்த திரைப்படத்தை ட்ரோல் செய்த புகைப்படங்களே இடம் பெற்று இருந்தன.

 

இப்படி திரையரங்குகளில் அடி வாங்கிய இந்தியன் 2 திரைப்படம், ஓடிடி யில் வெளியாகும் போதும் விமர்சனத்திற்கு ஆளானது. இப்படியான சூழலில் தான் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார் சங்கர். தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து அவர் கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் வில்லனாக நடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இதன் சூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியது.

 

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. தற்போது இதன் கதை கசிந்திருக்கிறது. அதாவது, ஆந்திராவில் ஒரு மாவட்டத்திற்கு ஆட்சியராக செல்லும் ராம்சரண், ஊழலுக்கு எதிராகவும் திறமையற்ற நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் அங்கு அமைச்சராக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவையும் எதிர்க்கிறார். இதன் பிறகு நடக்கும் கதைதான் கேம் சேஞ்சர் படத்தின் களம் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இந்த திரைப்படத்தின் கதையை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்