- Advertisement -
Homeபொழுதுபோக்குகாணொலி வாயிலாக விசாரணைக்கு ஆஜரான நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த...

காணொலி வாயிலாக விசாரணைக்கு ஆஜரான நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த விவாகரத்து வழக்கு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இது என்ன விவகாரத்து சீசனா என்பது போல கடந்தாண்டில் சினிமா நட்சத்திரங்கள் நிறைய பிரிவு அறிவிப்புகளும் விவாகரத்து கேட்டு வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் எதிர்பாராத திருப்பமாக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு அறிவித்தது உச்சபட்ச அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு இருந்தது.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்த நிலையில், மார்ச் மாதம் விவாகரத்து கேட்டு இருவருமே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு அவர்களது விருப்பபடி சட்டப்படியான விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

- Advertisement -

அதன்பிறகு, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார், தனது காதல் மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். அதே போல் நடிகர் ரவி மோகன், தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பிறகு இயக்குனர் சீனு ராமசாமி, தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். அடுத்து சாயிரா பானு, கணவர் ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார்.

இப்படி அடுத்தடுத்து நட்சத்திர தம்பதியர் தங்களது திருமண வாழ்வை முறித்துக்கொண்டு பிரிவதாக அறிவித்தது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் ரவி மோகன், ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நிலையில் குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

இந்த வழக்கில் நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தியை நேரில் விசாரித்த நீதிபதி, இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர உத்தரவிட்டார். சமரச தீர்வு மையத்தில் இருவரும் சந்தித்து பேசிய நிலையில் அடுத்தடுத்து அவர்களது விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்த சூழலில் இன்று ரவி மோகன், ஆர்த்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. காணொலியில் ரவி மோகன், ஆர்த்தி ஆஜராகினர். இதுவரை 3 முறை சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் ஆஜரான நிலையில் அடுத்தக்கட்டமாக இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த நீதிபதி, வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதனால் இந்த விவாகரத்து வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்