- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் உங்களை வாடா போடா என்று பேசக் கூடாதா, நடிகர் ரஜினிகாந்திடம் நேரடியாக கேட்ட வில்லன்...

நான் உங்களை வாடா போடா என்று பேசக் கூடாதா, நடிகர் ரஜினிகாந்திடம் நேரடியாக கேட்ட வில்லன் நடிகர் ராதாரவி – அதற்கு சூப்பர் ஸ்டார் சொன்ன நச் பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பாற்றல் மிக்க சிறந்த நடிகர்களில் ராதாரவி மிக முக்கியமானவர். நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகன். நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷா ஆகியோர் இவரது சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வாசு விக்ரம், ராதாரவியின் அண்ணன் நடிகர் எம்ஆர் வாசுவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் ராதாரவி பல படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக நடிகர் விஜயகாந்த் நடித்த 1980 படங்களில் பெரும்பாலும் வில்லனாக ராதாரவிதான் இருப்பார். பிறகு ரஜினி கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்தார். பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக சின்னதம்பி பூவேலி இது நம்ம பூமி பாண்டித்துரை வெற்றிவிழா போன்ற படங்களில் ராதாரவி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பல படங்களில் போலீஸ் அதிகாரியாக, அரசியல்வாதியாக ராதாரவி நடிப்பு வேற லெவலில் இருக்கும். குறிப்பாக சின்ன மாப்ளே படத்தில் ஆளவந்தான் கேரக்டரில் காமெடி ரோலில் அசத்தியிருந்தார்.

ரஜினியுடன் குரு சிஷ்யன் உள்ளிட்ட பல படங்களில் ராதாரவி நடித்திருக்கிறார். குறிப்பாக முத்து படத்தில் கிராமத்து ஜமீன்தார் கேரக்டரில் ராதாரவி இருப்பார். அவரது அக்கா வீட்டில் ரஜினி முத்து வேலைக்காரனாக இருப்பார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினியை டேய் முத்து வா இங்கே என்று பேசுவது போல் காட்சி இருந்தது.

- Advertisement -

இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் ராதாரவி கூறியதாவது, முத்து படத்தில் ஒரு காட்சியில் நான் ரஜினியை டேய் முத்து வா இங்கே என்று அழைப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அதன்பிறகு மதியம் லஞ்ச் டைமில் பிரேக் விடப்பட்டது. அப்போது அந்த படத்தின் உதவி இயக்குனர் என்னிடம், டேய் முத்து வாடா போடான்னு நீங்க பேசறது சரியில்லே என்பது போல் சொன்னார்.

அதற்கு நான், என்னடா செய்யறது, அண்ணேன்னு கூப்பிடட்டா என்று குசும்பாக கேட்டேன். அப்படி இல்லண்ணே, வாங்க போங்கன்னு பேசுங்க என்றார். அப்போது ரஜினி வெளியே அமர்ந்திருந்தார். அங்கு சென்று நான் அவரிடம் உட்கார்ந்தேன், ஏன் சார் நான் உங்களை வாடா போடான்னு பேசறது உங்களுக்கு புடிக்கலையான்னு கேட்டேன். இல்லையே, ஏன் யார் சொன்னா, என்று அதிர்ச்சியாக கேட்டார். அதைப்பத்தி எல்லாம் அவருக்கு கவலையே கிடையாது. சூப்பர் ஸ்டார் அது இது எல்லாம் எதுவுமே அவர்கிட்டே இல்லை என்று ராதாரவி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்