தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஒரு கல் ஒரு கண்ணாடி போகன் ரோமியோ ஜூலியட் அரண்மனை அரண்மனை 2 மாப்பிள்ளை எங்கேயும் காதல் வேலாயுதம் சேட்டை தீயா வேலை செய்யணும் குமாரு மான் கராத்தே சிங்கம் 2 வாலு புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் படங்களில் மார்க்கெட் குறைந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி ஆகியோருடன் சேர்ந்து கொண்டு தனது கணவர் தன்னை கொடுமை செய்ததாக தற்போது மும்பை அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து 4 பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2020ம் ஆண்டில் பிரசாந்த் – முஸ்கான் திருமணம் நடந்தது. அதே சமயம் 2022ம் ஆண்டிலேயே குடும்பத்தின் டார்ச்சர் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனியே முஸ்கான் நான்சி ஜேம்ஸ் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில்தான் தற்போது தனது கணவரின் குடும்பத்திற்கு எதிராக அவர் போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடிகை ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார். இடையில் தனது கணவருடன் முஸ்கான் சமரசமாக செல்ல விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ஹன்சிகா மற்றும் அவரது அம்மா இருவரும் குறுக்கீடு செய்து முட்டுக்கட்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் காரணமாக தான் இப்படி ஒரு புகாரை முஸ்கான் போலீசில் அளித்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் பிரபல நடிகையாக இருந்த ஹன்சிகா மோத்வானி, இப்படி தனது நாத்தனாரை கொடுமை செய்ததாக மும்பை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





