- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மகன் என்னிடம் கதை கூறிய போது அதிர்ச்சி அடைந்து விட்டேன்... சஸ்பென்சை வைத்த இசையமைப்பாளர்...

விஜய் மகன் என்னிடம் கதை கூறிய போது அதிர்ச்சி அடைந்து விட்டேன்… சஸ்பென்சை வைத்த இசையமைப்பாளர் தமன்… அப்போ முதல் படமே பிளாக்பஸ்டர்தான் போல…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தியாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். இவர் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது அது விமர்சனங்களை தாண்டி வசூலில் மிகப்பெரும் பாய்ச்சலை அடைந்து விடுகிறது. இதன் காரணமாகவே விஜய் படங்களுக்கு என்று இங்கு தனி மார்க்கெட் உள்ளது.

 

- Advertisement -

குறிப்பாக அவரது படங்களுக்கு குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகம் இருப்பதே இது சாத்தியமாகி வருகிறது. இதனால் விஜய் திரைப்படத்தை எடுத்தால் லாபம் உறுதி என்ற நோக்கத்துடன் தயாரிப்பாளர்கள் முந்தி வருகின்றனர். இருப்பினும் அரசியலுக்கு சென்றுள்ள விஜய் தனது கடைசி திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

 

- Advertisement -

தற்போது அவர் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட போகிறார் விஜய். ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது தான் தனது இலக்கு என்று அவர் கூறியிருந்தார். இதனால் அதற்கான பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இப்படி விஜய் திரை உலகில் இருந்து வெளியேற அவரது மகன் ஜேசன் சஞ்சய் இப்போதுதான் என்ட்ரி கொடுக்கிறார். ஏற்கனவே அவர் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு தனது தந்தையுடன் ஆட்டம் போட்டிருந்தார். இப்படியான சூழலில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாகத்தான் அறிமுகம் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் இயக்குனராக களம் இறங்க உள்ளார்.

 

இதற்காக லண்டனில் திரைத்துறை சார்ந்த படிப்பை மேற்கொண்டார். அங்கு தனது நண்பர்களுடன் சில குறும்படங்களையும் இயக்கினார். இப்படியான சூழலில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் சஞ்சயின் கதாநாயகன் குறித்த தகவல் வெளியாகவே இல்லை. இப்படியான சூழலில் தான் சந்தீப் கிஷன் படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். சமீபத்தில் இது குறித்து பேசிய அவர், ஜேசன் சஞ்சய் என்னிடம் கதை கூறிய போது நான் ஷாக்காகி விட்டேன். அப்படி ஒரு கதை அது. அதில் எந்த ஒரு பெரிய ஹீரோவையும் சுலபமாக நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் தனது கதைக்கு ஏற்ற நாயகன் சந்தீப் கிஷன்தான் என்று அவரை தேர்ந்தெடுத்துள்ளார் ஜேசன் சஞ்சய். நிச்சயம் இது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்