- Advertisement -
Homeபொழுதுபோக்குராயனில் அடுத்த நடிகையின் போஸ்டரும் வந்தாச்சு... அனைவரின் படங்களும் கருப்பு வெள்ளையில்... தனுஷ் மட்டும் கலர்...

ராயனில் அடுத்த நடிகையின் போஸ்டரும் வந்தாச்சு… அனைவரின் படங்களும் கருப்பு வெள்ளையில்… தனுஷ் மட்டும் கலர் போட்டோவில்… என்ன சொல்ல வருகிறார் இயக்குனர்….

- Advertisement -

நடப்பாண்டில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவருக்கும் திரைப்படங்கள் வெளியாக இருப்பதால், வரும் நாட்கள் திரையரங்குகள் திருவிழா கோலமாக காட்சியளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ரஜினிக்கு வேட்டையன், கமலுக்கு இந்தியன் 2, விஜய்க்கு கோட், அஜித்திற்கு விடாமுயற்சி என அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இதில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று தனுஷின் ராயன் திரைப்படம். தனுஷே இயக்கி நடித்து இருக்கும் இந்த திரைப்படம் அவரது ஐம்பதாவது படமாக உருவாகிறது. இந்த திரைப்படத்திற்காக, திருப்பதியில் மொட்டை அடித்தார் தனுஷ்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இதற்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன. வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

செல்வராகவன் சில ஆண்டுகளுக்கு முன்பு காசிமேடு என்னும் திரைப்படத்தை இயக்க இருந்தார். இதில் அஜித் குமார், தனுஷ் மற்றும் பரத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தடைபட்டு போனது. இப்படியான சூழலில் அந்தக் கதையைத்தான் தனுஷ் எடுத்திருப்பதாக தகவல்கள் பரவின.

- Advertisement -

ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்தார் செல்வராகவன். இது தனது தம்பியின் கனவு திட்டம் என்றும், இதில் நடிப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறியிருந்தார். இப்படியான சூழலில் கடந்த வாரம் முதல் ராயன் திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி முதலில் வெளியான போஸ்டரில், தனுஷ் சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மூவரும் நடமாடும் உணவகத்தில் வேலை பார்ப்பது போல் காட்சி இருந்தது. கையில் ஆயுதங்களுடன் அவர்கள் போஸ்டரில் இடம் பெற்றிருந்தனர். இதனை தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் ஆகியோரது போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. தற்போது அபர்ணாவின் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. ஆனால் படத்தில் இடம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் கருப்பு வெள்ளை புகைப்படத்திலேயே காட்சி இருக்கின்றனர். இதில் தனுஷின் புகைப்படம் மட்டும் கலரில் இருந்ததால், இதன் பின்னணியில் இயக்குனர் எதையோ சொல்ல விரும்புகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்