- Advertisement -
Homeபொழுதுபோக்குவெறும் 40 செகன்ட்ஸ்தானே என அலட்சியமாக நினைத்திருந்தால், இந்த இடத்துக்கு நான் வந்திருக்க முடியாது -...

வெறும் 40 செகன்ட்ஸ்தானே என அலட்சியமாக நினைத்திருந்தால், இந்த இடத்துக்கு நான் வந்திருக்க முடியாது – நடிகர் சூரி இப்படி ஒரு விஷயத்தை செஞ்சிருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லனாவது, வில்லன் ஹீரோக்கள் ஆவது, நடிகர் இயக்குனராவது, இயக்குனர் நடிகராவது, காமெடி நடிகர் ஹீரோவாவது, பிறகு அவரே வில்லனாவது சில நேரங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூட இயக்குனர்களாக மாறி விடுகின்றனர். இப்படி சினிமாவில் யாரும் எந்த நிலைக்கும் மாறிவிடுவது சாத்தியமாகிறது.

இதற்கு அடிப்படையில் அவர்களது திறமையும் உழைப்பும்தான் காரணம். தங்களது தகுதிகளை, திறமைகளை, அதற்கான உழைப்பை அவர்கள் வெளிப்படுத்தினால் நிச்சயமாக எந்த நிலையிலும் அவர்களால் சாதிக்க முடிகிறது. அதை தமிழ் சினிமாவில் பலரும் நிரூபித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் காமெடி செய்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் சூரி. பரோட்டா சூரி என்பதுதான் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அவரது அடையாளம். பிறகு ரஜினி விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடி செய்து முன்னணி காமெடி நடிகரானார்.

ஆனால் திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக சூரி மாறினார். கருடன் கொட்டுக்காளி விடுதலை 2 படங்களை தொடர்ந்து இப்போது மாமன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இனி நடிப்பில் ஹீரோ தான் என் பயணம் என்றும் சூரி உறுதியாக கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் சூரி கூறியதாவது, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சிக்காக காலை முதல் சாப்பிடவில்லை. இரவு 10 மணிக்கு அந்த காட்சியை எடுத்தனர். 13 பரோட்டோ சாப்பிட்டேன். என்னால் சாப்பிடவே முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது.

சீமராஜா படத்தில் 40 விநாடிகள் வரும் ஒரு காட்சிக்காக என்னை இயக்குனர் பொன்ராம் சிக்ஸ் பேக் வைக்கச் சொன்னார். 40 வினாடிகள் தானே வரும் என்று நான் அலட்சியமாக நினைக்கவில்லை. அதற்காக நான் மெனக்கெட்டேன். அந்த பிட்னஸ் உடம்பை பார்த்துதான் எனக்கு இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அந்த 40 செகண்ட்ஸ் தான் என்னை ஹீரோவாக்கி இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது, என்று சூரி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்