- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலா சார் உடனான சந்திப்பின்போது இதுதான் நடந்தது... உண்மையை கூறிய மாரி செல்வராஜ்... நெகிழ்ச்சிமிகு தருணம்...

பாலா சார் உடனான சந்திப்பின்போது இதுதான் நடந்தது… உண்மையை கூறிய மாரி செல்வராஜ்… நெகிழ்ச்சிமிகு தருணம்…

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகளை முடித்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். முதலில் இந்த திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் தான் வெளியாவதாக இருந்தது. அதற்காகத்தான் இந்த திரைப்படத்தையும் மாரி செல்வராஜ் எடுத்தார்.

 

- Advertisement -

ஆனால் படத்திற்கான பணிகள் நிறைவடைந்தும், இது திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இதனை ரிலீஸ் செய்தது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும் அதன் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் யாரிடமும் இல்லை.

 

- Advertisement -

சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் ஹிட் அடித்து இருந்த போதும், படம் பெரிய அளவு ரீச் ஆகவில்லை. இப்படியான சூழலில், படத்திற்கான ப்ரிவியு ஷோ சில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள், இயக்குனர்கள் என ஏராளமானோர் பார்த்தனர். அப்போதே படம் நன்றாக இருப்பதாக பலர் கூறினர்.

 

இந்த நிலையில், பிரிவியூ ஷோ முடிந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை மாரி செல்வராஜ் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இயக்குனர் பாலா படத்தைப் பார்த்து முடித்ததும், பெரும் சோகத்துடன் வெளிவந்து மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். பிறகு இருவரும் சிறிது நேரம் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

 

அவரது கையை பிடித்தபடியே பாலா சிறிது நேரம் இருந்தார். இந்த காட்சியை இணையத்தில் வைரலானது. அது மட்டுமல்லாமல் வாழை திரைப்படம் ரீச் ஆனது. தற்போது திரையரங்குகளில் அந்த திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. யதார்த்த வாழ்வியலுடன் கலந்த இந்தத் திரைப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்த நிலையில் பாலா உடன் நடந்த சந்திப்பு குறித்து மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பிற்குப் பிறகு பாலா சார் என்னிடம் எதுவும் பேசவில்லை. அப்போது நான் போறேன் டா என்ன விட்டுரு என்று மட்டும் கூறினார். அவர் பேசியது பெரிதாக என் காதில் விழவில்லை. என்னுடைய புரிதல் சரியாக இருந்தால், இன்னும் என்னென்ன கதை எல்லாம் டா வைத்திருக்கிறாய் என்று கேட்டதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்