- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 ஆண்டுகளாக நடிச்சுட்டேன், சினிமாவை விட்டு விலகவும் முடிவு செஞ்சுட்டேன் ஆனா… - நடிகை நித்யாமேனன்...

15 ஆண்டுகளாக நடிச்சுட்டேன், சினிமாவை விட்டு விலகவும் முடிவு செஞ்சுட்டேன் ஆனா… – நடிகை நித்யாமேனன் இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நித்யாமேனன் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மெர்சல் சைக்கோ திருச்சிற்றம்பலம் மாலினி 22 பாளையங்கோட்டை ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், இப்போது ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ளார்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில், கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்துள்ள இந்த படம் வருகிற 14ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் ரிலீஸாக உள்ளது. மேலும் பாண்டிராஜ் இயக்கும் ஒரு புதிய படத்திலும், திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து இட்லிகடை என்ற படத்தில் மீண்டும் தனுஷூடன் நித்யாமேனன் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை நித்யா மேனன் கூறியதாவது, என்னுடைய சின்ன வயதில் இருந்தே என்னை டான்ஸ் ஆடு பாட்டு பாடு கேமரா முன்பாக வந்து நடி என்று என் அம்மா என்னை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் சினிமா என்றாலே எனக்கு சுத்தமாக பிடிக்காது.

போதும் சினிமாவை விட்டுவிட்டு, வேறு ஏதாவது பண்றேன். எனக்கு இது பிடிக்கவில்லை என்று சமீபத்தில் என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யும்மா என்று சொல்லிட்டார்கள். அந்த அளவுக்கு போன நிலையில், திடீரென கடவுள் கொடுத்த நெஞ்சம் தான் என்னை மீண்டும் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சினிமாவை விட்டு முழுவதும் விலகிவிடலாம். 15 ஆண்டுகள் நடித்து விட்டோம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், திருச்சிற்றம்பலத்தில் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை தேசிய விருதும் எனக்கு கிடைத்தது. அந்த விருது கிடைத்த நிலையில் தான் நம்மை சினிமா விடாது, கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் இது என்றும் நினைத்துக் கொண்டேன்.

சிறுவயதிலிருந்தே கேமரா முன்னாடி நிற்கவே பிடிக்காது. தனிப்பட்ட சுதந்திரத்தை ரொம்பவே சினிமா நடிகையாக மாறியதிலிருந்து மிஸ் செய்கிறேன். இயல்பான வாழ்க்கை எனக்கு கிடைக்காத பீலிங் எப்பவுமே என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்குது. வைல்டு லைப் போட்டோகிராபர் போல வாழ ஆசைப்பட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகை நித்யா மேனன் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்