- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை திரைப்படம் உங்களை அழ வைக்கும்... உணர்ச்சி பொங்க பேசிய நடிகை நித்யா மேனன்......

இட்லி கடை திரைப்படம் உங்களை அழ வைக்கும்… உணர்ச்சி பொங்க பேசிய நடிகை நித்யா மேனன்… என்ன இப்படி சொல்லிட்டாங்க…

- Advertisement -

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா படைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதில் தனுஷின் பிச்சைக்காரன் தோற்றம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

 

- Advertisement -

ஒரு பெரும் தொகையை மையப்படுத்தியே இந்த கதை நகரும் என்று தெரிகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி பேசப்பட்ட நிலையில், குபேரா திரைப்படம் வரும் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இட்லி கடை என்னும் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

 

- Advertisement -

இதற்கு முன்னதாகவே அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார். பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். முழுக்க முழுக்க இளம் வட்டாரங்களே இதில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

 

இப்படியான சூழலில் தற்போது முழுக்க முழுக்க இட்லி கடையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருகிறார் தனுஷ். நடிகரின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தை மையப்படுத்தி இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்திலிருந்து வெளியான முதல் போஸ்டரில், தனுஷ் சமையல்காரன் தோற்றத்தில் காட்சியளித்தார்.

 

அவரும் நடிகர் ராஜ்கிரனும் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்கும்போது இது பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருவது போல் தெரிகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறினார்கள். இதில் நித்யா மேனனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் தனது ரோல் குறித்து நடிகையே பேசி இருக்கிறார்.

 

இட்லி கடையில் எனது கதாபாத்திரம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் எனது கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட் ஆகத்தான் அது இருக்கும். இட்லி கடை எமோஷனலாக இருக்கும் உங்களை அழ வைக்கும் என்றும் பேசியிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்