- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படப்பிடிப்புக்கு புல்ஸ்டாப் வெச்சுட்டாங்களா, இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாரே நடிகர் அஜீத்குமார்? - மே...

விடாமுயற்சி படப்பிடிப்புக்கு புல்ஸ்டாப் வெச்சுட்டாங்களா, இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாரே நடிகர் அஜீத்குமார்? – மே 10ல் தொடரும் அதிரடி

- Advertisement -

நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் துவக்கத்தில் அஜர்பைஜானில் படப்பிடிப்பை துவங்கிய இந்த விடாமுயற்சி படம் இன்னும் முடிவடையவில்லை. இன்னும் பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட வேண்டிய சூழலில், படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாக வருகிறது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம், ஒரே நேரத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன், கமல் நடிக்கும் இந்தியன் 2, அதேபோல் அஜித் நடிக்கும் விடாமுயற்சி ஆகிய 3 படங்களை தயாரித்து வருகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்டையன் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு, அடுத்ததாக விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஆனால் மே 15ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும், அடுத்த வாரம் துவங்கும், இந்த வாரம் துவங்கும், அப்போது தொடங்கும், இப்போது என்று ஆளாளுக்கு கூறிய நிலையில், இதுவரை விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்குவதற்கான எந்த ஒரு முகாந்திரமும், அறிகுறியும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் அஜித்குமார், திடீரென ஒரு அதிரடி முடிவெடுத்துள்ளார். அதன்படி ஜூன் மாதம் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை, வரும் மே 10ம் தேதி துவங்குகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் மே 10ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்குகிறது.

படப்பிடிப்பை துவங்குவதற்கான ஏற்பாடுகள், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் இப்போதே துவங்கி விட்டன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட்பேட் அக்லி படப்பிடிப்பு, முதலில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே துவங்குவது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும், விடாமுயற்சி படம் அப்படியே பாதியில் நிற்பது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஏனெனில், விடாமுயற்சி படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த திரிஷா நடித்துள்ளார். அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் அந்த படம் இப்படி பாதியில் நிறுத்தப்பட்டதால், ஒருவேளை அப்படியே டிராப் ஆகி படம் வராமலேயே போய் விடுமோ என்ற ஒரு கலக்கத்தில் அஜித் ரசிகர்கள் காணப்படுகின்றனர். லைகா நிறுவனமும் பெரிய படங்கள் கைவசம் இருப்பதால், விடாமுயற்சியை கைவிட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்