தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். பீட்சா படம் ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
தொடர்ந்து இறைவி ஜிகர்தண்டா பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற சூர்யாவின் 45வது படம் உருவாகியுள்ளது.
ரெட்ரோ படத்தில் கதாநாயகனாக சூர்யாவும் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற மே 1ம் தேதி திரைக்கு வெளியாகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்துவரும் சூர்யாவுக்கு ரெட்ரோ படமும், அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் படமும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். அவரது ஸ்டோன்பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். மெர்க்குரி, பென்குயின் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கார்த்திக் சுப்பராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக நடிக்க இணையதள பிரபலம் நிஹாரிகா கமிட் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த படம் மேயாத மான். இந்த படம்தான் கார்த்திக் சுப்பராஜ் நடித்த தயாரித்த முதல் திரைப்படமாகும். இதுவரை 15 படங்களை அவர் தயாரித்துள்ளார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் 16வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவது போல காட்சி அமைந்துள்ளது. வைபவ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு பெருசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வைபவ், சுனில், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி தீபா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இது உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.





