- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்கள் வணங்கான் வசூலை 2 நாட்களில் முந்தியதா மதகஜ ராஜா - 12 ஆண்டுகளுக்கு...

4 நாட்கள் வணங்கான் வசூலை 2 நாட்களில் முந்தியதா மதகஜ ராஜா – 12 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படி ஒரு அசுரத்தனமான வெற்றியா?

- Advertisement -

கடந்த 2012ம் ஆண்டில் உருவான படம் மதகஜ ராஜா. சுந்தர் சி இயக்கத்தில், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிப்பில் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி மற்றும் மனோபாலா மணிவண்ணன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நடிகர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

மதகஜராஜா படம் 2013ம் ஆண்டில் பொங்கலுக்கு வர வேண்டிய படம், 12 ஆண்டுகளாக திரைக்கு வரவில்லை. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி கடன் பிரச்னைகள் காரணமாக இந்த படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. சுந்தர் சி, விஷால் பலகட்டங்களாக முயற்சித்தும் அந்த படத்தை வெளியே கொண்டுவர முடியவில்லை.

- Advertisement -

இந்த சூழலில், இப்போது பொங்கலுக்கு மதகஜ ராஜா படம் திரைக்கு வந்துள்ளது. 12ம் தேதி ரிலீஸான இந்த படம் காமெடி காதல் கதையாக, வழக்கமான சுந்தர் சி பாணியில் ஜாலியான ஜானரில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள், படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மதகஜ ராஜா படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் 2வது நாளில் இந்த படம் மொத்தம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளது. அடுத்து புதன் மாட்டுப்பொங்கல், வியாழன் அன்று காணும் பொங்கல் என அரசு விடுமுறை தினங்களும், சனி ஞாயிறு தினங்களும் ஞாயிறு தினங்கள் என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதே நேரத்தில் சுந்தர் சி இயக்கும் படங்களுக்கு பெஸ்டிவல் பிலிம்ஸ் என்ற பெயரும் உள்ளது. அதனால் பண்டிகை காலங்களில் குடும்பம் குடும்பமாக சுந்தர் சி படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் அரண்மனை 4 போல சுந்தர் சிக்கு மதகஜ ராஜா படமும் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

இரண்டே நாட்களில் மதகஜ ராஜா படம், 8 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படம் 4 நாட்களில் மொத்தம் 5.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இரண்டே நாட்களில் வணங்கான் படம் வசூலை கடந்து மதகஜ ராஜா படம் 8 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படி ஒரு அசுரத்தனமான வெற்றியே என்று இயக்குனர் சுந்தர் சியை கோலிவுட் வட்டாரம் ஆச்சரியமாக பார்க்கிறது.

- Advertisement -

சற்று முன்