- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கருணை கோட்டா.. எதிரிக்குக்கூட இதை செஞ்சிடாதீங்க நயன் - நானும் ரௌடிதான் பற்றி மனம்...

அந்த கருணை கோட்டா.. எதிரிக்குக்கூட இதை செஞ்சிடாதீங்க நயன் – நானும் ரௌடிதான் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்

- Advertisement -

போடாபோடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் இயக்குவதற்கு அவர் கமிட்டாகும்போது அவரது 21. அந்தப் படம் ரிலீஸாகும் வயது 25. இப்படி பல போராட்டங்களை கடந்து அந்தப் படம் கடந்த ஆம் ஆண்டு வெளியானது. சிம்பு, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கதை ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் படம் நன்றாக இருந்தாலும் துப்பாக்கி படத்துடன் ரிலீஸானதால் காணமல்போனது போடாபோடி.

முதல் படத்தின் தோல்விக்கு பிறகு பல வருடங்கள் படம் ஏதும் இயக்காமல் சினிமாவில் கிடைத்த வேலைகளை செய்துகொண்டிருந்தார். பாடல்கள் எழுதுவது, படத்துக்கு போஸ்டர்கள் டிசைன் செய்வது என சினிமாவுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தார். அதேசமயம் அவரிடம் ஒரு கதையும் இருந்தது. அந்தக் கதைதான் நானும் ரௌடிதான்.

- Advertisement -

விக்னேஷ் சிவனை பெரும் இயக்குநராக அடையாளப்படுத்திய படமென்றால் நானும் ரௌடிதான். விஜய் சேதுபதி, நயன் தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டார்க் காமெடி ஜானரில் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அந்தப் படத்திலிருந்துதான் அவரும், நயனும் காதலிக்க தொடங்கினர். நானும் ரௌடிதானுக்குப் பிறகு அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் தோல்வியை சந்தித்தது. அதேபோல் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பும் நழுவிப்போனது. தற்போது அவர் ப்ரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நானும் ரௌடிதான் படம் உருவானதை பற்றி விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நானும் ரௌடிதான் கதையை பலரிடம் சொன்னேன். ஆனால் ஒத்துக்கொள்ளவில்லை. ஒருமுறை விஜய் சேதுபதியிடம் சொல்லி அவரும் ஒத்துக்கொள்ளவில்லை. சில காலம் கழித்து மீண்டும் அவரிடமே சென்று சார் தயவு செஞ்சு நீங்க டேட் கொடுங்க. ஒரு படத்தை ஹிட்னு நினைச்சு நடிப்பீங்க ப்ளாப் ஆகும். ஃப்ளாப்னு நினைப்பீங்க ஹிட்டாகும். இதை நீங்க ஃப்ளாப் படம்னு நினைத்தே நடிங்க என சொன்னேன்.

- Advertisement -

உடனே அவர் நான் டேட் கொடுத்தா இந்தப் படம் நடக்குமானு கேட்டு அவர் கருணை கோட்டாவுல டேட் கொடுத்தாரு. இதற்கிடையே வை ராஜா வை படத்தின் போஸ்டரை நாங்க டிசைன் பண்ணோம். அதன் மூலம் ஐஸ்வர்யா மேடம் தனுஷ்ட்ட அறிமுகப்படுத்துனாங்க. அதனையடுத்து வேலையில்லா பட்டதாரி படத்துக்கும் போஸ்டர் டிசைன் பண்ணோன். அது மூலமா தனுஷோட நட்பு கிடைச்சது.

அவரிடம் நானும் ரௌடிதான் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நயன் தாராட்ட கதை சொல்றியானு கேட்டு என்னை அனுப்பி வைத்தார். நானும் எனது இணை இயக்குநருமான செந்திலும் ஆட்டோவில் சென்றோம். அப்போது செந்திலிடம் நான், எப்படியும் அவங்க கதை புடிக்கலனுதான் சொல்வாங்க. நீங்க லாபில உட்கார்ந்து இருங்க ஒன்றரை மணி நேரம் நயன் தாராவை பக்கத்துல இருந்து பார்த்துட்டு கதை சொல்லிட்டு வந்துடுறேனு சொல்லிட்டு போனேன்.

போனதும் எனக்கு ஒரு க்ரீன் டீ கொடுத்தாங்க. அதை நான் லைட்டா குடித்ததும் இதை எதிரிக்குக்கூட கொடுத்துடாதீங்க என்ற மைண்ட வாய்ஸ் எனக்குள் ஓடியது. பிறகு அவர் எவ்வளவு நேரம் கதை சொல்வீங்க என கேட்டார். நான் ஒன்றரை மணி நேரம் என்றேன். உடனே தனது மொபைல் ஃபோனை ஆஃப் செய்துவிட்டு ம்ம் இப்போ கதை சொல்லுங்க என கேட்க ஆரம்பித்தார். நான் சொன்ன இரண்டு காமெடிகள் அவருக்கு சிரிப்பை வரவைத்தன. அதன் பிறகுதான் நயன் இதில் நடிப்பார் என எனக்கு நம்பிக்கை வந்தது. முழு கதையையும் கேட்ட பிறகு அவர் நடிக்க ஒத்துக்கொண்டார்” என்றார்.

- Advertisement -

சற்று முன்