- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளியா என்னை பார்க்கிறேன் - இயக்குனர் மிஷ்கின் சொன்ன ரகசியம்,...

நான் ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளியா என்னை பார்க்கிறேன் – இயக்குனர் மிஷ்கின் சொன்ன ரகசியம், இது வேற லெவல் ப்ரோ என பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கினுக்கு தனி அடையாளம் உண்டு. அவரது படங்கள் என்றாலே வித்யாசமான ஒரு கோணத்தில் விசித்திரமான ஒரு கதைக்களத்தில் நடப்பதாக இருக்கும். அரைச்ச மாவை அரைக்காமல் புதிய விதமான கதையில் அவரது படங்கள் விறுவிறுப்பாக ரசிக்கும்படி இருக்கின்றன.

அந்த வகையில் அவர் இயக்கிய முதல் படம் சித்திரம் பேசுதடி. நரேன் பாவனா நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அஞ்சாதே படமும் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நரேன் அஜ்மல் விஜயலட்சுமி பிரசன்னா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதில் வில்லனாக இயக்குனர் பாண்டியராஜன் நடித்திருந்தார்.

- Advertisement -

அடுத்து மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஷால் பிரசன்னா கே பாக்யராஜ் வினய் ஆண்ட்ரியா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். க்ரைம் திரில்லர் படமாக பெரிய அளவில் இது பேசப்பட்டது. தொடர்ந்து கண்பார்வையற்ற கேரக்டரில் உதயநிதி நடித்த சைக்கோ படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இப்படி ஒரு வித்யாசமான கதைகளை கொண்ட படங்களை தந்த இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் சமீபகாலமாக இயக்குனர் மிஷ்கின் நடிகராக மாறி பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு நடிகராகவும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சினிமாவை பொழுதுபோக்குக்கு நான் பார்க்க மாட்டேன். சினிமா பாக்கறது என்னோட வேலைக்காக. இப்படி சொல்றது மூலமா நான் ஒரு பெரிய பருப்புன்னு கிடையாது. நான் செருப்பு தைக்கிற தொழிலாளியாக என்னை நினைக்கிறேன்.

செருப்பு தைக்கிற தொழிலில் எத்தனை விதமான தோல் இருக்கு? நூல் இருக்கு? ஊசி எவ்வளவு கூர்மையா இருக்கு? எத்தனை முறை உரசினால் ஊசி கூர்மையாகும்? அப்படீங்கறதை முழுசா கத்துக்கணும். அப்போ ஒரு சினிமால 24 கிராப்ட் இருக்கு. நான் சாகிற வரைக்கும் வேலை செஞ்சிட்டு இருக்கணும். எனக்கு சினிமாவுல பெரிய பொறுப்பு இருக்கு. சினிமா என் தாய். சினிமா என் கடவுள் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்