கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2015ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான படம் பிரேமம். மலர் டீச்சர் என்ற கேரக்டரில் சாய் பல்லவி கதாநாயகியாக அறிமுகமானது இந்த படத்தில்தான். இந்த பிரேமம் படத்தில்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் மேரி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
அடுத்த 2016ம் ஆண்டில் துரை செந்தில்குமார் இயக்கிய கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இதில் 2 கேரக்டரில் அண்ணன், தம்பியாக தனுஷ் நடித்திருந்தார். அதில் ஒருவருக்கு திரிஷாவும், ஒருவருக்கு அனுபமா பரமேஸ்வரனும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தமிழில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பது குறைவு என்றாலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தாராள கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், அந்த வரிசையில் அனுபமா பரமேஸ்வரனுக்கும் அதிகளவில் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த சூழலில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரனிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ஐ லவ் யூ பார் எவர் என்று சொல்வதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பொய். காரணம் எங்கேயும் நடக்காத ஒன்று இது.
அது மட்டுமல்ல நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை. இதுபோன்ற டாக்ஸிக் காதலில் சிக்கி இருப்பவர்கள் தயவு செய்து இப்போதே ஓடிவிடுங்கள் என்பதுதான் என்னுடைய சிம்பிளான அறிவுரை என்று அனுபமா பரமேஸ்வரன் காதல் குறித்த தனது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
காதல் மீது இவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். ஆனால் காதலில் விழுந்த பலரும் கடைசியில் இப்படி ஒரு கசப்பான மனநிலைக்குதான் வருகின்றனர். ஒருவேளை நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் சில காதல் தோல்வி அனுபவங்கள் இருக்குமோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





