- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டு மட்டும் இத்தனை தமிழ் திரைப்படங்களின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறதா... அடேங்கப்பா...

இந்த ஆண்டு மட்டும் இத்தனை தமிழ் திரைப்படங்களின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறதா… அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுதே…

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவிய காலங்கள் தமிழ் சினிமாவின் இருண்ட காலம் என்று கூறலாம். அந்த காலகட்டத்தில் எந்த திரைப்படங்களும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் திரையரங்குகளில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாக முடியாமல் முடங்கி கிடந்தன. இந்த சமயத்தில்தான் ஓடிடி வர்த்தகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

 

பலரும் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்தார்கள். தமிழ் சினிமாவில் இதற்கான துணிச்சலான முடிவை முதன் முதலில் எடுத்தது சூர்யாவின் 2d எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான். இதன் தயாரிப்பின் கீழ் எடுக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படம் முதன்முதலாக ஓடிடி இல் நேரடியாக ரிலீஸ் ஆனது.

 

பிறகு பல்வேறு திரைப்படங்களும் அதில் தொடர்ந்து வெளியாக, சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களும் இந்த வரிசையில் வந்தன. விக்ரம் – கார்த்திக் சுப்பராஜ் – துருவ் விக்ரம் கூட்டணி எடுக்கப்பட்ட மகான் திரைப்படமும் ஓடிடி இல் தான் வெளியானது.

 

இப்படி தொடர்ச்சியாக முக்கியமான திரைப்படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியானதால் இனிமேல் திரையரங்குகளின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று அப்போது பலரும் கூறி வந்தார்கள். ஆனால் இதுவெல்லாம் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு மாறிப்போனது. மீண்டும் திரையரங்குகளுக்கு மக்கள் படை எடுக்க ஆரம்பித்தார்கள்.

 

இருப்பினும் ஓடிடியில் படத்தை பார்ப்பதற்காக தனி ஒரு ரசிகர் கூட்டம் இப்போதும் இருக்கிறது. ஒரு புது படம் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகு நேரடியாக ஓடிடிக்குள் வருவதால் ரசிகர்கள் அதனை விரும்புகிறார்கள். இதில் அமேசான் மற்றும் netflix உள்ளிட்ட தளங்கள் முன்னணியில் இருக்கின்றன. இப்படியான சூழலில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கும் முன்னணி திரைப்படங்களின் உரிமையை, netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

குறிப்பாக கமல்ஹாசன் சிம்பு நடித்திருக்கும் தக் லைப், அஜித் குமார் நடித்திருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களையும் அந்த நிறுவனமே வாங்கி இருக்கிறது. இதேபோல் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் பைசன் திரைப்படமும், netflix கரங்களுக்கு சென்று இருக்கிறது. சூர்யாவின் ரெட்ரோ, பிரதீப் ரங்க நாதனின் டிராகன் உள்ளிட்ட திரைப்படங்களும் இந்த பட்டியலில் நீள்கின்றன.

 

சற்று முன்