- Advertisement -
Homeபொழுதுபோக்குஅயோத்தியில் ராமர் கோவில் விழாவுக்கு சென்ற ரஜினிகாந்த், அந்த இடத்தில் நேர்ந்த கசப்பான அனுபவம் -...

அயோத்தியில் ராமர் கோவில் விழாவுக்கு சென்ற ரஜினிகாந்த், அந்த இடத்தில் நேர்ந்த கசப்பான அனுபவம் – விடாப்பிடியாக முயற்சித்து சாதித்த ரஜினிகாந்த்

- Advertisement -

உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். நூற்றுக்கணக்கான குருமார்கள், ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழா கோலாகலமாக நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், இந்து அமைப்புகளில் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், இந்திய சினிமா நடிகர்கள் என முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தனுஷ், தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், பாலிவுட் ஸ்டார் நடிகை மாதுரி தீக்‌ஷித், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய அளவிலான பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க நேற்று ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவரது அண்ணன் சத்யநாராயணா கெய்ட்வாட் ஆகியோர் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து, உத்தரபிதேரசம் சென்று அயோத்திக்கு சென்றனர்.

- Advertisement -

இன்று காலை ராமர் கோவில் விழா பகுதிக்கு தனது மனைவி மற்றும் தனது அண்ணன் ஆகியோருடன் ரஜினிகாந்த் சென்றார். அப்போது முன்வரிசையில் விவிஐபி பகுதியில் ரஜினிகாந்த் அமர்ந்து விழாவை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அவருக்கு மட்டுமே ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

லதா ரஜினிகாந்த், சத்யநாராயணா கெய்ட்வாய் மற்றொரு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். குடும்பத்துடன் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை காணவந்த இங்கு இப்படி பிரித்து விட்டார்களே என டென்சன் ஆன ரஜினி, விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசி, தனக்கு அருகிலேயே தன் மனைவிக்கும், அண்ணனுக்கும் சீட் ஒதுக்கி தருமாறு கூற, அவர்களும் ஏற்பாடு செய்து தந்துள்ளனர். அதன்பின்புதான் நிம்மதியாக விழாவில் காணப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்