- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம் சேஞ்சர் படம் படுதோல்விக்கு அந்த முன்னணி தெலுங்கு நடிகர்கள்தான் காரணமா? - இத்தனை உள்ளடி...

கேம் சேஞ்சர் படம் படுதோல்விக்கு அந்த முன்னணி தெலுங்கு நடிகர்கள்தான் காரணமா? – இத்தனை உள்ளடி வேலைகள் நடந்ததா? என்னய்யா சொல்றீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள்தான் சண்டையிட்டு கொள்வார்கள். ஹீரோக்களின் படத்தின் விமர்சிப்பார்கள். ஆனால் நடிகர்கள் படங்களில் நடிப்பதோடு சரி. வெற்றி அல்லது தோல்வியை ரசிகர்களின் கையில் கொடுத்துவிட்டு அடுத்த படங்களில் நடிக்க போய் விடுவார்கள்.

ஆனால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அப்படியல்ல. புதிதாக வரும் நடிகர்கள் யாரும் பெரிய அளவில் ஜெயித்துவிடக் கூடாது. அப்படி புதுமுக நடிகர் நடித்து ஒரு படம் மாஸ் ஹிட் தந்துவிட்டால் அவரை வைத்து இயக்க இயக்குனரோ, தயாரிப்பாளரோ முன்வர மாட்டார்கள். அந்தவுக்கு பாலிடிக்ஸ் இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் கேம் சேஞ்சர். நேரடி தெலுங்கு படமான இது இந்தி மற்றும் தமிழிலும் டப்பிங் செய்து வெளியானது. ஆனால் படம் வெளியாகி 3 நாட்களில் ரூ. 180 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தால்தான் பிரேக் ஈவன் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படம் பிளாப் ஆக சில உள்ளடி வேலைகள் நடந்த தகவல்களும் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் வலைபேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, கேம் சேஞ்சர் படம் தோல்விக்கு பின்னால் சில அநீதியான விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதாவது இந்த படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பே இந்த படம் ஒரு குப்பை என்று நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன் தரப்பில் இருந்து சில கோடிகள் வரை செலவு செய்து தகவல் பரவச் செய்துள்ளனர்.

- Advertisement -

ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படம் ரிலீஸான போது, ராம்சரண் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் கேம் சேஞ்சர் படம் வெளியான போது, ஜூனியர் என்டிஆர், ராம்சரணுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதற்கு இவர்கள் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒன்றாக நடித்தவர்கள். அதே போல் ராம்சரணும், அல்லு அர்ஜூனும் உறவினர்களாக இருந்தாலும் சினிமா துறையில் அவர்களுக்குள் காழ்ப்புணர்ச்சி, பொறாமை இருக்கிறது.

கேம் சேஞ்சர் படம் ஓவர்சீஸ் ரிலீஸூக்கு போன போது, அதன் எச்டி ஒரிஜினல் பிரிண்ட் ஒரு தரப்பிடம் கிடைத்துள்ளது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் ரூ. 5 கோடி தந்தால் அந்த எச்டி பிரிண்டை தந்துவிடுகிறோம். இல்லை என்றால் இணையத்தில் விடுவோம் என்று பேரம் பேசியுள்ளனர். அவர் ஏற்கனவே இருந்த பரபரப்பில் இதில் அலட்சியமாக இருந்து விட்டார். அதனால் இணையத்தில் எச்டி பிரிண்டை வெளியிட்ட அவர்கள், லோக்கல் சேனலிலும் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர் என்று பல அதிர்ச்சியான தகவல்களை ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்