நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு துவங்கி 16 மாதங்கள் ஆன நிலையில், இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வருகிற பிப்வரி 6 என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக அஜீத் படமே வராத நிலையில் இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையே அப்படியே உல்டாவாக்கி காப்பியடித்துதான் இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அந்த படத்தை தயாரித்த பாரமவுண்டன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் லைகா புரடக்சன்ஸ் முறையான அனுமதி பெறவில்லை.
அதனால் துவக்கத்தில் ரூ. 150 கோடி கேட்ட அந்த நிறுவனம் பிறகு ரூ. 30 கோடி தருமாறு வலியுறுத்தியது. ஆனால் ஏற்கனவே பல நஷ்டங்களை சந்தித்துள்ள லைகா நிறுவனம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த விவகாரம் காரணமாகவும், படத்தின் பினிஷிங் முடியாத சூழலிலும்தான் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
என்ஓசி வாங்காமல் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு தயாரான நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மறுத்துவிட்டனர். ரெட் ஜெயின்ட் முவீஸ் ரிலீஸ் செய்கிறது என்றாலும், நாளைக்கு சட்டசிக்கல் வந்தால் கோர்ட்டில் நாம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கோர்ட்டில் அவர்கள் கேட்கும் தொகையை 300 கோடி ரூபாயாக இருந்தாலும் நாம் கட்டாயம் தந்தாக வேண்டும். தேவையின்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் சுமூக முடிவு ஏற்பட்டு அவர்கள் என்ஓசி தந்த பிறகே விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சுபாஸ்கரன் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த சூழலில் பாரமவுண்டன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் லைகா நடத்திய தொடர் பேச்சுவார்த்தையில் ரூ. 10 கோடி ரொக்கமாக தருவதாகவும், பிறகு பிராப்பிட் ஷேர் அடிப்படையில் ஒரு பெருந்தொகையை தரவும் சம்மதித்துள்ளனர். அதன்பிறகே விடாமுயற்சி படத்துக்கு என்ஓசி தர அவர்கள் ஓகே கூறியுள்ளனர். அதன்பிறகே இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என்பது உறுதியாகி உள்ளது.





