தமிழ் சினிமா நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தாலும், இங்கு ஒரு உச்ச நட்சத்திர கதாநாயகருக்கும், மற்றொரு உச்ச நட்சத்திர கதாநாயகருக்கும் இடையே போட்டி, பொறாமை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருவரும் தங்களுக்குள் அப்படி ஏதும் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறினாலும், ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், அதன் கொண்டாட்டத்தின் போதும் இந்த உராய்வு இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

இது இன்றைக்குதான் புதிதாக எழுந்த விஷயம் அல்ல. சினிமா ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே இந்த போட்டி இருக்கத்தான் செய்கிறது. அது எப்போது விஸ்வரூபம் எடுத்தது என்றால், எம்ஜிஆர் – சிவாஜி காலத்தில்தான். அப்போதைய உச்ச நட்சத்திரமாய் இருவரும் விளங்க, அவர்களன் ரசிகர்கள் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் ஒருவரை ஒருவர் உரசி பார்த்தனர்.
இது எம்ஜிஆர் சிவாஜியோடு நின்று விடாமல், ரஜினி – கமல், விஜய் – அஜித் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் சண்டையும், ரஜினி கமல் சண்டையும் ஓய்ந்த நிலையில், விஜய் அஜித்திற்கான போட்டி மட்டும் இன்றுவரை புகைந்து கொண்டு தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு, அட்டகாசம் படத்தில் நடிகர் அஜித் உனக்கென்ன உனக்கு என்ன தம்பி என்று பாடலைப் பாடி, விஜயை மறைமுகமாக வம்புக்கு இழுக்க, இந்த பக்கம் தளபதி கீதை திரைப்படத்தில் உன் தல, வாலு, முண்டம் எல்லாத்தையும் இங்க வர சொல்லு என்று கூறியிருப்பார். இப்படி இருவரும் தங்கள் தொழில் போட்டியில் படத்துக்கு படம் பணத்தை வாரிக் குவிக்க, பாதிக்கப்படுவது யாரோ அப்பாவி ரசிகர்கள்தான்.
இது ஒரு புறம் இருக்க, நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டம் மீது தீராத ஆசையுடன் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. என்னது நம்ம விஜயா இப்படி பண்றார் என்று சிலர் கேட்கலாம். ஆனால் இது உண்மைதான் என்று புலப்படும் வகையில் பேசி இருக்கிறார் சினிமா விமர்சகர் பிஸ்மி. அதாவது அன்றைய தேதியில் பத்திரிகைகளில் அஜித் – விஜய் என்று எழுதினால் உடனே விஜய் தரப்பிடமிருந்து போன் வந்துவிடுமாம்.
எதற்கு என்றால் அந்த செய்தியை நிறுத்தி சொல்வதற்கு அல்ல, மாறாக விஜய் – அஜித் என்றே பத்திரிக்கையில் எழுத கூறுவார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்பதைப் போல விஜய் – அஜித் என்றே இருக்க வேண்டும் என்றே தளபதி விரும்புவாராம். இதிலிருந்தே விஜய் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரிகிறது என்று கூறுகிறார் பிஸ்மி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.





