தமிழ் சினிமாவில் 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். வாலி நட்புக்காக விஐபி பிரியமானவளே பம்மல் கே சம்பந்தம் பஞ்சதந்திரம் அவள் வருவாளா துள்ளாத மனமும் துள்ளும் நேருக்கு நேர் ஏழுமலை என பல படங்களில் சிம்ரன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
குறிப்பாக நடிகை சிம்ரன் நடனத்தில் ரசிகர்களை அசத்தியவர். ஆல் தோட்ட பூபதி நானடா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா போன்ற ஐட்டம் பாடல்களில் அவரது டான்ஸ் வேற லெவலில் இருக்கும். இப்போதும் இந்த பாடல்களை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். பேட்ட சீமராஜா அந்தகன் போன்ற படங்களில் இப்போதும் நடித்து வருகிறார். இதில் வில்லி கேரக்டர்களிலும் சிம்ரன் அசத்துகிறார்.
நடிகை சிம்ரன் துவக்கத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். திருமணம் பிள்ளைகள் குடும்பம் என செட்டிலான பிறகு, அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டன. எனினும் அவ்வப்போது நல்ல கேரக்டர் கிடைத்தால் சிம்ரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகை சிம்ரன் பங்கேற்றார். அப்போது மேடையில் இருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சிம்ரன் குறித்து பேசியதாவது, கடந்த ஆண்டில் ஒரு நாள் இரவு 2.44 மணிக்கு எனக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த நேரத்தில் போன் வந்ததால் நான் எடுக்கவில்லை. பிறகு வாட்சப் மெசேஜ் வந்தது. நான் நடிகை சிம்ரன், உங்ககிட்ட உடனே பேசணும் என்று அதில் இருந்தது.
உடனே நான் சிம்ரனை போனில் அழைத்து பேசினேன். அப்போது அவர், நான் இப்ப லண்டனில் இருக்கிறேன். நான் தங்கியிருந்த ஓட்டலில், நான் தங்குவதற்கான அனுமதி முடிந்துவிட்டது. வெளியே போகச் சொல்லி விட்டார்கள். நான் இப்போது நடுரோட்டில் நிற்கிறேன், என்று சொன்னார். அவரது ரெண்டு பசங்களும் அவருடன் இருக்கின்றனர்.
நீங்க அங்கேயே இருங்கம்மா, என்று சொல்லிவிட்டு லண்டனில் இருந்த என் நண்பருக்கு போன் போட்டேன். ஆனால் அவர் அமெரிக்காவில் இருப்பதாக சொன்னார். பிறகு லண்டனில் இருக்கும் மற்றொரு நண்பரிடம் சொல்லி உதவுமாறு கேட்டேன். பிறகு அவர் வந்து சிம்ரன் மற்றும் பிள்ளைகளை காரில் அழைத்துச் சென்று தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார் என்று கலைப்புலி எஸ். தாணு அந்த விழாவில் கூறியிருக்கிறார். சிம்ரன் போன்ற பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலமையா என ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர்.





