இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் நாடோடிகள். இந்த படத்தில் நடிகர் சசிக்குமார் அனன்யா பரணி விஜய் வசந்த் கஞ்சா கருப்பு நமோ நாராயணன் ஜெயப்பிரகாஷ் ராஜா லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளம் காதலர்களை சேர்த்து வைக்கும் கதைக்களத்தில் உருவான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சசிக்குமாரின் தங்கையாக, விஜய் வசந்த் ஜோடியாக நடித்தவர் அபிநயா. இவர் வாய் பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சிறந்த நடிப்பை அந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளில் உருவான நாடோடிகள் படத்தில் அதே கேரக்டரில் அபிநயா நடித்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றவர்.
நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன் ஏழாம் அறிவு வீரம் ஆயிரத்தில் ஒருவன் தாக்க தாக்க தனி ஒருவன் என பல படங்களில் நடித்த அபிநயா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். வாய் பேசாத நிலையிலும், சைகை மொழி மூலம் தனது கேரக்டரை புரிந்து அவர் சிறப்பான நடிப்பை தந்து வருகிறார்.
இந்த சூழலில் மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி அவரே நாயகனாக நடித்துள்ள பணி என்ற படத்தில் அவருக்கு மனைவியாக, கதாநாயகியாக அபிநயா நடித்திருக்கிறார். இதில் சில காட்சிகளில் அவர் எல்லை மீறிய கவர்ச்சியில், ஆபாசமாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் புகார் எழுந்திருக்கிறது.
குறிப்பாக வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் 2 வாலிபர்கள், அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். அந்த காட்சியில் எல்லை மீறிய ஆபாசம் இருப்பதாகவும் அத்தகைய காட்சியில் அபிநயா நடிக்க மறுத்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை அபிநயா, சைகை மொழியில் பதில் கூறியதாவது, அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும் அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு. அதைப்பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. பணி படத்தை இயக்கிய ஜோஜூ ஜார்ஜ் ஒரு மிகச்சிறந்த நடிகர். புகழ் பெற்ற நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் பணி புரிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது என்று நடிகை அபிநயா பதில் கூறியிருக்கிறார்.





