நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த படம்தான் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகும் படம். ஜனநாயகன் படத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில்லை என நடிகர் விஜய் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த ஆண்டில் துவங்கிய விஜய் வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்று பேசி வருகிறார். திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார். முழுநேர அரசியல்வாதியாக இப்போது மாறியிருக்கிறார்.
நடிகர் விஜயை பொருத்த வரை ஜனநாயகன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறார். இன்னும் படம் ரிலீஸ் செய்ய 6 மாதங்களுக்கு மேல் உள்ளதால் படம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் எதையும் இப்போது வெளியிட வேண்டாம். படம் ரிலீஸாக ஒரு மாதம் முன்னதாக அப்போது ஜனநாயகன் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக வெளியிடலாம் என்று இயக்குனர் எச் வினோத்திடம் கண்டிசனாக கூறிவிட்டார்.
ஆனால் வருகிற 22ம் தேதி நடிகர் விஜயின் 51வது பிறந்த நாள் ஆகும். இந்த நாளில் ஜனநாயகன் படத்தில் இருந்து ஏதேனும் போஸ்டர் டீசர் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. விஜய் அதற்கெல்லாம் தடை போட்டு விட்டார் என்று படக்குழுவினர் கூறிவந்தனர்.
ஆனால் இது தளபதி ரசிகர்களுக்கும் தவெக கட்சி தொண்டர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை தரும் என்பதால் இயக்குனர் எச் வினோத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் புரடக்சன்ஸ் நிர்வாகிகள், நடிகர் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஏதேனும் ஒரு அப்டேட் உங்கள் பிறந்த நாளில் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று வற்புறுத்தி இருக்கின்றனர்.
இதையடுத்து மனசு மாறிய நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட பர்மிஷன் தந்திருக்கிறார். அதனால் வருகிற 22ம் தேதி ஜனநாயகன் படத்தில் இருந்து நறுக்கு தெறித்து போல, ஒரு துணுக்காக சில விநாடிகளில் உருவான கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளனர். விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இந்த கிளிம்ஸ் குறித்த தகவல் தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





