இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான முதல் படம் சேது. இந்த படம் கடந்த 1990ம் ஆண்டில் வெளியானது. நடிகர்கள் விக்ரம் ஸ்ரீமன் நடிகை அபிதா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் இன்று வரை நடிகர் விக்ரம் நடிப்புக்கு பெயர் சொல்லும்படியாக இருக்கிறது.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகுதான் தொடர்ந்து பாலா இயக்கத்தில் பல படங்கள் வெளியாகின. இதில் நான் கடவுள் பரதேசி அவன் இவன் நந்தா பிதாமகன் உள்ளிட்ட பலத்த வரவேற்பை பெற்றன, வெற்றி பெற்றன. இப்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
வாய் பேசாத கேரக்டரில் இந்த படத்தில் அருண் விஜய் நடிப்பு பெரிய வரவேற்பை அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க கமிட் ஆகி ஒரு மாதம் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட பிறகு சூர்யா விலகி விட்டார். பிறகுதான் அந்த கேரக்டரில் அருண் விஜய் நடித்திருந்தார்.
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், சமீபத்தில் அவருக்கு பாலா 25 என்ற பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் சினிமாத்துறை சார்ந்த இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் பங்கேற்று பாலாவின் திரை பயணம் குறித்து பாராட்டினர்.
ஆனால் இந்த விழாவில் பாலா இயக்கிய படங்களில் நடித்த ஆர்யா விஷால் விக்ரம் அதர்வா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. நடிகர் சசிக்குமார் அப்போது சபரிமலைக்கு சென்றிருந்ததால் அவரால் வர முடியவில்லை. இந்நிலையில் சேது படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பாலா இயக்கத்தில் முதல் படமாக உருவான சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் முரளிதான். அவர் படத்தில் மொட்டையடித்து நடிக்கவும் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போது பிஸியான நடிகராக இருந்த முரளியால் சேது படத்தில் நடிக்க முடியவில்லை. கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அதற்கு பின்புதான் சேது படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்தார். அதுவே அவரது திரைபயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.





