- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் காஞ்சனா சீரிஸில் கை வைத்த ராகவா லாரன்ஸ்... இந்த முறை அவரது இயக்கத்தில் இணைவது...

மீண்டும் காஞ்சனா சீரிஸில் கை வைத்த ராகவா லாரன்ஸ்… இந்த முறை அவரது இயக்கத்தில் இணைவது இரண்டு நடிகைகள்…

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சிக்கு எப்படி அரண்மனை சீரியஸோ அதே போல் தான், ராகவா லாரன்ஸிற்கு காஞ்சனா சீரிஸ். நடிப்பு நடனம் தாண்டி இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் அவர், காஞ்சனா திரைப்படத்தை கொடுத்து மிகப்பெரிய வெற்றியை கண்டார். சொல்லப்போனால் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்கள் தலைதூக்குவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

ஒரு பங்களா, அதில் தங்கி இருக்கும் பேய், அதற்கு ஒரு பிளாஷ் பேக், அவர்களைப் பழிவாங்க துடிக்கும் ஆத்மா, அதற்கு உதவி செய்யும் ஹீரோ என பழைய டெம்ப்ளேட்டையே அவர் உருட்டி படத்தை எடுத்தாலும் அதன் திரைக்கதையை சுவாரசியமாக கொடுத்ததால் காஞ்சனா திரைப்படம் ஹிட் அடித்தது.

சொல்லப்போனால் அத்தனை ஹாரர் காட்சிகளுக்கு நடுவிலும் நகைச்சுவை என்னும் மருந்தை அவர் சரியாக கொடுத்து படத்தை எடுத்ததால் ராகவா லாரன்ஸின் திரைப்படங்கள் கவனம் பெற ஆரம்பித்தன. இந்த பார்முலாவையே அவர் காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்தினார். அதுவும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.

இப்படி காஞ்சனா ஒன்று மற்றும் இரண்டு என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை ருசித்த நிலையில், அதன் மூன்றாம் பாகத்தையும் எடுத்தார் ராகவா லாரன்ஸ். ஆனால் இந்த முறை அது ரசிகர்களுக்கு சோதனையை தான் கொடுத்தது. ஒரே டெம்ப்ளட்டை மாறி மாறி உபயோகித்து அதில் சுவாரசியமும் இல்லாமல் படத்தை கொடுத்ததால் ரசிகர்களுக்கு சலிப்பை உண்டு பண்ணியது.

இப்படியான சூழலில் தான் தற்போது அவர் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸ் அதற்கு முன்னதாக பென்ஸ் திரைப்படத்தில் தான் நடித்து வந்தார். ஆனால் அதற்கான பணிகளில் தற்போது சிறிய தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடைவெளியில் தான் அவர் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

வழக்கமான பாணியிலேயே இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதில் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் உடன் பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கூட்டணியில் புதியதாக ஒரு பாலிவுட் நடிகை இணைந்து இருக்கிறார். நோரா ஃபதேகி என்னும் அவர் இந்த திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே காஞ்சனா திரைப்படத்தின் நான்காம் பாகம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்