- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் எடுத்தோம், சில பேருக்கு பிடிக்கல.. அடுத்த முறை பண்ணும்போது.. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்...

படம் எடுத்தோம், சில பேருக்கு பிடிக்கல.. அடுத்த முறை பண்ணும்போது.. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் சார் என்னிடம் சொன்னது இது தான் – நெல்சன் பேச்சு

- Advertisement -

விஜய் – நெல்சன் கூட்டணியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த நெல்சன், விஜய்யுடன் இணைந்ததால் இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தை தயாரித்தது. பிரபலமான ஒரு மாலில் தீவிரவாதிகள் குழு ஹைஜாக் செய்து பொதுமக்களை சிறைபிடிக்க, அவர்களிடம் இருந்து ஹீரோ வீரராகவன் எப்படி ஜனங்களை காப்பாற்றுகிறார் என்பதை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

கதை நன்றாக இருந்தாலும், தொய்வான திரைக்கதை, அழுத்தமில்லாத காட்சியமைப்பு, லாஜிக் மீறல்களால் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள், நெல்சனை இணையத்தில் தொடர்ந்து கிண்டல் செய்தனர். இப்படியான சூழலில்தான், ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் எனும் ஹிட் படத்தை தற்போது கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

ரஜினியுடன் உச்ச நட்சத்திரங்களான சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் நடித்திருப்பதால் ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் வசூலை குவித்து வருகிறது. பல கிண்டல், கேலிகளுக்கு மத்தியில் ஜெயிலரை எடுத்து அதில் சாதித்து காட்டிய நெல்சன், தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயிலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றதும் முதல் ஆளாக விஜய்தான் தன்னை வாழ்த்தியதாக கூறியிருந்தார். இதனிடையே பீஸ்ட் பட தோல்வி குறித்து பேசிய அவர், “அந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்ததும், விஜய் சார்… என்னிடம் படம் எடுத்தோம். சில பேருக்கு புடிச்சிருக்கு, சில பேருக்கு பிடிக்கல நம்ம நேர்மையாக உழைச்சோம். என்கிட்ட நீ என்ன சொன்னியோ அத எடுத்த. அடுத்த முறை பண்ணும்போது வேற மாதிரி பண்ணிரலாம்” என்று தளபதி விஜய் கூறியதாக நெல்சன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சார் நீங்க ஏதும் கோபமாக இருக்கீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர், யோவ், என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டார். பின்னர் என்னை கூப்பிட்ட விஜய்சார், அப்போ… உனக்கும் எனக்கும் இருக்குற பழக்கம் அவ்வளோதானா. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு நீ கேட்டது. இது இல்லேனா இன்னொரு படம் பண்ணலாம். அது வேற, இது வேற” என்று கூறினார். பீஸ்ட் படம் குறித்து விஜய் பேசியதாக நெல்சன் கூறியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்