- Advertisement -
Homeபொழுதுபோக்குகொளுத்தி போடவும், விவகாரங்களை கிளப்பி விடவும், சண்டையை மூட்டவும் அந்த நடிகரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புகிறார்களா?...

கொளுத்தி போடவும், விவகாரங்களை கிளப்பி விடவும், சண்டையை மூட்டவும் அந்த நடிகரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புகிறார்களா? – வெடித்தது சர்ச்சை!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த முறை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என்று அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார்.

கமலுக்கு ஏற்கனவே கமிட்டான படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டி இருப்பதாலும், அமெரிக்காவில் 45 நாட்கள் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற அவர் செல்ல இருப்பதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இயலாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள், போட்டியாளர்களுக்குள் ஏற்படும் மோதல்கள், டாஸ்க்குகள், டாஸ்க் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் இவைகள் தான் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துகின்றன. முதலில் டாஸ்க்குகள் மட்டுமே நடத்தப்பட்ட பிக்பாஸ் வீட்டுக்குள், கடந்த சில ஆண்டுகளாக போட்டியாளர்களுக்கும் நடக்கும் சண்டைகளை பெரிதுபடுத்தியே நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்கின்றனர்.

அதிலும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போட்டியாளர்கள் சண்டை கோழிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஏனெனில் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது. அடுத்தவர் விவகாரங்களில் பஞ்சாயத்து செய்வது. வேண்டுமென்றே வம்பு இழுப்பது, சண்டை போடுவது போன்ற குணாதிசயங்களை கொண்ட போட்டியாளர்கள் இருக்கும் பட்சத்தில், பிக் பாஸ் வீட்டுக்குள் எப்போதும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாது.

- Advertisement -

அப்படி பரபரப்பான காட்சிகள் தொடர்ந்தால், தினமும் பிக்பாஸ் பார்க்கும் பார்வையாளர்களும் அதை விரும்பி பார்ப்பார்கள் என்ற கோணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. அதே போல் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் போட்டியாளர்களை கவனமாக தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்ப பிக்பாஸ் குழுவினரும் விஜய் டிவியும் முடிவு செய்துள்ளது.

ஏனெனில் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் கமல்ஹாசன் வரப்போவதில்லை. நடிகர் விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அதனால் வரும் போட்டியாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள்தான் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தும் என்பதால் நடிகர் ரஞ்சித் இந்த முறை வீட்டுக்குள் போட்டியாளராக வருகிறார். இவர் ஏற்கனவே கவுண்டம்பாளையம் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்த வகையில் சர்ச்சையில் சிக்கியவர். மேலும் விஜய் டிவி சீரியல்களில் நடித்தவர். நல்ல கருத்துகளை பேசக்கூடியவர். அந்த வகையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் இருப்பார் என்பதால், முக்கிய போட்டியாளராக நடிகர் ரஞ்சித் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்