- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்காவில் இருந்து திரும்பிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரசிகர்களுக்கு சொன்ன மகிழ்ச்சியான செய்தி!

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரசிகர்களுக்கு சொன்ன மகிழ்ச்சியான செய்தி!

- Advertisement -

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். தமிழில் ஜெயிலர் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டியிருந்தார்.

இதையடுத்து ஜெயிலர் 2 படத்திலும் சிவராஜ்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இது அவரது ரசிகர்களை பெரிய கவலையை தந்தது. அதன்பிறகு சிவராஜ்குமார் அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ்குமார், அங்கு புற்றுநோய்க்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அவர் நலமாக இருப்பதை உறுதிபடுத்தியதால் ரசிகர்களும் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சிவராஜ்குமாருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க இருப்பதாகவும் அவரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கடந்த வாரத்தில் தகவல் வெளியானது. சிவராஜ்குமார் பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பி வந்துவிட்டார். இப்போது அவர் தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது உடல் நலம் குறித்து பேசியிருப்பது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது, புற்றுநோய் என்று டாக்டர்கள் சொன்னதும் ஆரம்பத்தில் பயந்துவிட்டேன். ஆனால் என் ரசிகர்களும் நண்பர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து பக்கபலமாக இருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு இப்போது குணமடைந்து வருகிறேன். விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கி ரசிகர்களை மகிழ்விப்பேன், என்று சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்