- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படம் ஏற்கனவே அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா? அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகுமா?...

புஷ்பா 2 படம் ஏற்கனவே அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா? அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகுமா? – அறிவிப்பு வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், ஜெகதீசன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடல் காட்சியில், நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் தேசிய விருது அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கில் வெளியான புஷ்பா படத்துக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. பிற மொழிகளிலும் இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்று கொண்டாடிய நிலையில் புஷ்பா மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

- Advertisement -

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. செம்மர கடத்தலை மையப்படுத்திய இந்த படம், ஆக்‌ஷன் அதிரடி படமாக இருந்தது. புஷ்பா படம் முதல் பாகமாக வெளியான நிலையில், 2ம் பாகமாக வருகிற 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என, அப்போதே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் புஷ்பா 2 படத்தை இன்னும் சிறப்பாக தர வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட தேதியில், 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது. அதற்கு மாற்றாக வருகிற டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதியிலும் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்ற தகவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில், படத்தின் இயக்குனர் சுகுமாரனுக்கும், ஹீரோ நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடும் மோதலும் ஏற்படுகிறது. எடுத்த காட்சிகளை திரும்ப எடுப்பது, மாற்றி எடுப்பது, கதையின் காட்சிகளை அடிக்கடி மாற்றுவது என ஏகப்பட்ட வீண் செலவுகள், நடிகர்களின் கால்ஷீட்டை விரயமாக்குவது என இயக்குனர் சுகுமாரன் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. அதனால் புஷ்பா 2 படம், வரும் டிசம்பர் 6ம் தேதியும் வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

புஷ்பா படத்தை போலவே புஷ்பா 2 படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த படத்தை மிக ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று புஷ்பா படக்குழு சார்பில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், புஷ்பா 2ம் பாகம் வெளியாக இன்னும் 75 நாட்கள் ( டிசம்பர் 6ம் தேதி) இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் புஷ்பா 2 அறிவித்த தேதியில் ரிலீஸாகும் என ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்