- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி அல்ல, நடிகர் தனுஷ்தான், அவரை நினைத்துதான் கதையே...

அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி அல்ல, நடிகர் தனுஷ்தான், அவரை நினைத்துதான் கதையே எழுதினேன் – பிரபல இயக்குனர் சொன்ன தகவல்!

- Advertisement -

சில இயக்குனர்கள் ஒரு படத்தின் கதையை எழுதும்போது இந்த கேரக்டரில் அந்த ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கற்பனையோடுதான் திரைக்கதை, காட்சிகளை எழுதுவார்கள். ஆனால் சில காரணங்களால் அந்த நடிகர் நடிக்காமல் போக, வேறு நடிகர் அதே கேரக்டரில் நடிக்கும் சூழல் உருவாகும். அப்படி தமிழ் சினிமாவில் பல படங்கள் உருவாகி இருக்கின்றன.

எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல்தான் என்பதும் இந்தியன் படத்தில் முதலில் நடிக்க நான் நினைத்தது நடிகர் ரஜினியை தான் என்றும் இயக்குனர் ஷங்கர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஆனால் கடைசியில் எந்திரன் படத்தில் ரஜினியும், இந்தியன் படத்தில் கமலும் நடித்து பெரிய ஹிட் கொடுத்தனர்.

- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில், கடந்த 2010ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் நான் மகான் அல்ல. இது பல ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த படத்தின் டைட்டில்தான் என்றாலும், அதுவல்ல இந்த கதை. இதில் காஜல் அகர்வால் நீலிமா ராணி ஜெயப்பிரகாஷ் லட்சுமி ராமகிருஷ்ணன் சூரி அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ஒரு இளம்பெண்ணை கடத்தி சில இளைஞர்கள் கொடூரமாக கொன்றுவிட அந்த விஷயம் அறிந்த கார்த்தியின் அப்பா ஜெயப்பிரகாஷை அந்த கும்பல் கொன்றுவிடுகிறது. அவர்களை கண்டுபிடித்து கார்த்தி பழிவாங்குவதே கதை என்றாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் பெரிய வரவேற்பை பெற்ற படமாக இது இருந்தது.

- Advertisement -

இந்த படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில், நான் மகான் அல்ல படத்தின் கதையை நான் நடிகர் தனுஷை கதாநாயகனாக நினைத்துதான் எழுதினேன். இந்த படத்தை மகேந்திரகுமார் ஜெய் என்பவர்தான் தயாரிக்க இருந்தார். அவர்தான் கார்த்தியிடம் இந்த கதையை சொல்ல என்னை அனுப்பினார்.

நான் மகான் அல்ல கதையை சொன்னதும் மிகவும் பிடித்ததாக சொன்ன கார்த்தி, ஸ்டுடியோ கிரீன் தயாரித்தால் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டார். அதன்பிறகு தயாரிப்பாளர் மகேந்திரகுமார் ஜெய் சம்மதத்துடன் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கினேன் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்