- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், அமரன் படம் வெற்றி விழாவில் திடீர் மாற்றம்...

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், அமரன் படம் வெற்றி விழாவில் திடீர் மாற்றம் – அந்த படத்தின் அப்டேட்டும் கொடுத்துட்டாரே?

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்து முடித்தார். அந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன், அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சென்றார். கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற அவர் 45 நாட்கள் நடந்த ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றார். பிறகு கமல் அடுத்து நடிக்கும் 237 படம் குறித்து விவாதிக்க அன்பறிவ் மாஸ்டர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து அவர்களுடன் ஆலோசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

அமெரிக்கா செல்வதால், இந்த முறை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை கூட கமல் நிராகரித்து விட்டார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சிய தொகுத்து வழங்கிய கமல், அவராகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்துவிட்டார். பிறகு நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனை நடத்தி முடித்திருக்கிறார்.

இந்நிலையில் 4 மாதங்களாக அமெரிக்காவில் முகாமிட்டு இருந்த நடிகர் கமல்ஹாசன், இன்று காலை சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்களிடம், தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது என்ற தகவலை கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் விக்ரம். இந்த படத்தின் 2ம் பாகம் விக்ரம் 2 வருவது எப்போது என செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் இப்போது நான் வேறு ஒரு கதையை எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன் என கமல்ஹாசன் பதிலளித்தார்.

அப்படி என்றால் அமெரிக்காவில் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற்றது மட்டுமின்றி ஒரு திரைப்படத்துக்கான புதிய கதையை எழுதிக்கொண்டு வந்திருப்பதை தெரிவித்துள்ளார். அத்துடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படம் 100வது நாள் வெற்றி விழா, முதலில் சாய்ராம் கல்லூரியில் நடப்பதாக இருந்தது. இப்போது சென்னையில் மையத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளது.

சற்று முன்