- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி எல்லாம் தத்துவம் பேசுனா எப்படி கமிட் ஆகுறது? கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிள்தான்-சிம்புவின் பேட்டியால்...

இப்படி எல்லாம் தத்துவம் பேசுனா எப்படி கமிட் ஆகுறது? கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிள்தான்-சிம்புவின் பேட்டியால் கடுப்பான ரசிகர்கள்

- Advertisement -

சிலம்பரசன் “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார் என்று மட்டும் கூறிவிட்டு கடந்து போய்விட முடியாது. அவர் தமிழ் சினிமா துறையில் மன்மதனாகவே வாழ்ந்தார். சிம்புவின் அழகிற்கு மயங்காத இளம் பெண்களே கிடையாது. சிம்பு வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே அவருடன் நடித்த பல நடிகைகளுடன் டேட்டிங் செய்கிறார் என்று பல கிசுகிசுக்கள் வந்தன.

ஒரு கட்டத்தில் நயன்தாராவிற்கும் சிம்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பொது வெளியில் வெளியாகின. அதன் பின் நயன்தாராவுடன் பிரேக்கப் ஏற்பட்ட பிறகு ஹன்சிகா மோத்வானியுடன் சிம்புவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த காதலும் பிரேக்கப்பில் முடிந்தது.

- Advertisement -

இதனால் சிம்பு மிகவும் மனவிரக்திக்கு உள்ளானார். அந்த விரக்தியால் அவருக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாடு குறைந்தது. ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகளுக்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று அவர் மீது புகார்கள் வந்தன. மேலும் அவரின் உடல் எடையும் கூடியது. சிம்புவின் கெரியரே குளோஸ் என்று கூட விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து “ஈஸ்வரன்”, “மாநாடு” ஆகிய திரைப்படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார் சிம்பு. இந்த நிலையில் சிம்பு “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

அந்த பேட்டியில் சிம்பு, “நமது வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. இந்த தாடியை நான் நாளை ஷேவ் செய்தால் போய்விடும். நேற்று நான் வேறு கார் வைத்திருந்தேன். இன்று நான் வேறு கார் வைத்திருக்கிறேன். ஆதலால் என்ன சொல்ல வருகிறேன் என்றால், யாருமே நம்முடன் நிரந்தரமாக இருக்கப்போவது கிடையாது. நம்ம மட்டும்தான் நம்ம கூட இருக்கப்போகிறோம்” என்று தத்துவ ஞானி போல் பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்