நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். கேரளாவில் லோக்கல் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்த அவர் மனசிகாரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். டயானா மரியம் குரியன் என்ற அவரது பெயரும் நயன்தாரா என மாற்றப்பட்டது.
பிறகு ஹரி இயக்கத்தில் ஐயா படம் மூலம் அறிமுகமானமான நயன்தாரா தொடர்ந்து ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா ஜெயம்ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இப்போது வரை 75 படங்களில் நடித்து முடித்துள்ள அவர், ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
நயன்தாரா, சிம்புவுடன் வல்லவன் என்ற படத்தில் இணைந்து நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் சின்சியராக காதலிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. சினிமா நிகழ்ச்சிகளும் அவர்கள் ஒன்றாக வந்து கலந்துக்கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் சிம்பு, நயன்தாரா காதல் பிரேக்கப் ஆகி விட்டது.
அதன்பிறகு பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் அவருடனும் தனது உறவை முறித்துக்கொண்டார். பிறகு நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு பெற்றோராகி உள்ளனர்.
நாளை நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரது நடிப்பில் வெளியாகும் அடுத்த 3 படங்கள் குறித்த அறிவிப்பு, அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட உள்ளது. இதே நாளில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை நாளை, நயன்தாரா அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் ஓ2 மற்றும் நெற்றிக்கண் என்ற 3 படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.





