- Advertisement -
Homeபொழுதுபோக்குகேட்டவுடன் ரூ. 25 லட்சத்தை தூக்கி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, பிரபல நடிகர் சொன்ன...

கேட்டவுடன் ரூ. 25 லட்சத்தை தூக்கி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, பிரபல நடிகர் சொன்ன தகவல் – மனுஷன் இவ்வளவு தாராள மனசா நடந்திருக்காரே?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இதுவரை 50 படங்களில் நடித்திருக்கிறார். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்தாண்டில் விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் சலூன்கடை பார்பர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், சீனாவிலும் ரூ. 90 கோடி வசூலித்தது.

ஆரம்பத்தில் பல படங்களில் துணை நடிகராக நடித்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பிறகு பல படங்களில் நாயகனாக நடித்து படிப்படியாக முன்னேறியவர், பிறகு முன்னணி நடிகராக மாறினார். தர்மதுரை கருப்பன் சேதுபதி நானும் ரவுடிதான் என வெற்றிப் படங்களை தந்தார்.

- Advertisement -

பிறகு பேட்ட விக்ரம் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பிறகு, அட்லி இயக்கிய ஜவான் என்ற இந்தி படத்திலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார். இப்போது இனி வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

மகாராஜா படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 15 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக குறைத்துக்கொண்டார். வழக்கமாக வெற்றிப்படம் தந்தால் சம்பளத்தை கணிசமாக உயர்த்தும் நடிகர்களுக்கு மத்தியில், தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட நல்ல நடிகர், மனிதர் விஜய் சேதுபதிதான்.

- Advertisement -

விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் அவருடன் முக்கிய கேரக்டரில் நடித்தவர் மணிகண்டன். இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து அவர் நடித்த குடும்பஸ்தன் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, சில படங்களில் விஜய் சேதுபதியுடன் நான் நடித்த வகையில் அவருக்கும் எனக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. என்னுடைய நண்பனுக்கு அவசரமாக ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. உடனே ஆபரேசன் செய்தால்தான் அவன் பிழைப்பான் என்று மருத்துவமனையில் கூறிவிட்டனர். இதுபற்றி விஜய் சேதுபதி அண்ணனிடம் நான் தயங்கி தயங்கிதான் சொன்னேன். அடுத்த 10 நிமிடங்கள் என் அக்கவுண்ட்டுக்கு ரூ. 25 லட்சம் வந்துவிட்டது, என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார் நடிகர் மணிகண்டன்.

- Advertisement -

சற்று முன்